News August 19, 2024

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது: செல்லூர் ராஜூ

image

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று அதிமுக EX மினிஸ்டர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எப்படி ஆட்சியை பிடிக்கும் என, அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு செல்லூர் ராஜூ, சட்டம் ஒழுங்கு பாதிப்பு, போதைப் பொருள் புழக்கத்தால், திமுக மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்தலில் அதிமுக வென்று இபிஎஸ் CM ஆவார் என்றும் உறுதிபடக்கூறினார்.

Similar News

News March 30, 2026

விஜய்க்கு எதிராக போட்டியிடும் திலகபாமா.. யார் இவர்?

image

விஜய் களமிறங்கும் பெரம்பூரில் PMK பொருளாளர் திலகபாமா போட்டியிடுகிறார். இவர் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டிருந்தாலும் இதுவரை வெற்றிபெற்றதில்லை. 2021-ல் ஆத்தூர் தொகுதியில் திமுகவின் ஐ.பெரியசாமியை எதிர்த்து போட்டியிட்ட அவரால் 30 ஆயிரம் வாக்குகளை கூட பெறமுடியாமல் டெபாசிட் இழந்தார். இந்த சூழலில் பரிச்சயம் இல்லாத பெரம்பூரில் திலகபாமாவை களமிறக்கி உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>

News March 30, 2026

2 கிராம் தங்கம்.. தேர்தல் வாக்குறுதி அளித்தார்

image

செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜா, பூத் நிர்வாகிகளுக்கு புதிய வாக்குறுதியை அறிவித்துள்ளார். மறைமலைநகர், காட்​டாங்​கொளத்​தூர் பகுதியில் ஆதரவு திரட்டிய அவர், திமுக வேட்பாளரைவிட பாகம் அளவில் 100 வாக்குகள் பெறுபவர்களுக்கு 2 கிராம் தங்க மோதிரம், 300 வாக்குகள் அதிகம் பெறுபவர்களுக்கு 3 லட்சம் மதிப்பிலான ராயல் என்பீல்டு பைக் என ஜாக்பாட் ஆஃபரை வெளிப்படையாக கூறியுள்ளார். இது SM-ல் விவாதமாக மாறியுள்ளது.

News March 30, 2026

BREAKING: எதிராக திரும்பிய தீவிர விசுவாசி.. EPS அதிர்ச்சி

image

நாமக்கல் தொகுதியில் EPS அறிவித்த வேட்பாளருக்கு எதிராக KPP பாஸ்கர் சுயேச்சையாக களமிறங்க திட்டமிட்டுள்ளார். EPS-ன் தீவிர விசுவாசியான EX MLA பாஸ்கரின் இந்த முடிவு EPS தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். குறிப்பாக பாஸ்கரின் ஆதரவாளர்கள் நாமக்கல் அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு பாஸ்கர் வெற்றி வாய்ப்பை இழந்தார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!