News March 29, 2024
ஐந்து தொகுதிகளில் பாஜகவை திமுக வெல்ல வைக்கும்

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஐந்து தொகுதிகளில் பாஜகவை வெற்றி பெற வைக்க திமுக ஒப்புக்கொண்டுள்ளதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். குமரியில் பேசிய அவர், “திமுக – பாஜக இடையே ஒப்பந்தம் உள்ளது. அதன் காரணமாகவே பொன்முடி வழக்கில் தளர்வு ஏற்பட்டுள்ளது. பாஜகவை திமுக உண்மையாக எதிர்ப்பதாக இருந்தால், நேரடியாக மோதி இருக்க வேண்டும்; கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியிருக்க கூடாது” என்றார்.
Similar News
News October 28, 2025
2 மாநிலங்களில் வாக்குரிமை: PK-வை சுற்றும் சர்ச்சை

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், பிஹாரில் ‘ஜன் சுராஜ்’ என்ற புதிய கட்சியை தொடங்கி, வரவிருக்கும் தேர்தலை சந்திக்க உள்ளார். இச்சூழலில், பிஹார் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 2 மாநிலங்களில் அவர் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த 3 நாள்களுக்குள் அவர் விளக்கம் அளிக்க ECI உத்தரவிட்டுள்ளது.
News October 28, 2025
தொப்பையைக் குறைக்க உதவும் உணவுகள்

தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சியில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், சரியான உணவுகளைத் தேர்வு செய்வதும் அவசியம். எளிதாக கரையக்கூடிய நார்ச்சத்து, குறைந்த கலோரி கொண்ட உணவுகளை எடுத்துக்கொண்டால் எளிதாக குறைக்கலாம். அவை என்னென்ன உணவுகள் என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, உங்களுக்கு தெரிந்த உணவை, கமெண்ட்ல சொல்லுங்க.
News October 28, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு புதிய அப்டேட்

5 ஏக்கர் நன்செய், 10 ஏக்கர் புன்செய் நிலம் வரை வைத்திருப்பவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள். ஆனால், விண்ணப்பிக்கும்போது நில ஆவண விவரங்கள் கேட்கப்பட்டிருக்காது. இதனால், தங்களுக்கு ₹1,000 கிடைக்குமா என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. அவர்கள் அச்சப்பட தேவையில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களுக்கு நவம்பரில் அரசிடம் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட உள்ளதாம். SHARE IT


