News March 18, 2024
பெரம்பலூரில் களமிறங்கும் திமுக!

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தர் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இவர் பாஜகவில் இணைந்துள்ளதால், திமுக சார்பில் இந்த தொகுதியில் யார் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
Similar News
News April 2, 2025
மாணவிகளை தாக்கிய விடுதி சமையலர் பணியிட நீக்கம்

வெண்பாவூர் அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதியில் சமையலர் செல்வி, இரண்டு மாணவிகளை தாக்கிய சம்பவம் மாவட்ட நல அலுவலரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சமையலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிகழ்வு தொடர்பாக காவல்துறையின் மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
News April 2, 2025
சனி தோஷம் நிவர்த்தியாகும் சோளீசுவரர் கோயில்

பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறையில் உள்ளது இந்த சோளீசுவரர் கோயில். திருமாலும், பிரம்மனும் தங்களது சந்தேகங்களை தீர்த்து கொண்ட தலமாகும். கரிகால சோழனும் இங்கு வந்து வணங்கியதாக கூறப்படுகிறது.ராகு-கேது தோஷம், நாகதோஷம், சனி பாதிப்பு உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள கிணற்று நீரில் நீராடி பிரார்த்தனை செய்தால் சனிதோஷ பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
News April 2, 2025
பெரம்பலூரில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரீடைல் சேல்ஸ் அசோசியேட் பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு முடித்தவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்..