News October 27, 2025
DMK Vs BJP.. மாறிமாறி விமர்சனம்

அதிமுகவின் உரிமைகளை பாஜகவிடம் EPS அடகு வைத்துவிட்டதால், மக்களின் உரிமைகளை காக்க வேண்டியவர்கள் திமுகவினரும் தோழமைக் கட்சியினரும்தான் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி, மாநிலத்தின் உரிமைகளை, வளங்களை லஞ்சம் மற்றும் ஊழலிடம் திமுக விற்று விட்டதால், ஒட்டு மொத்த மாநிலத்தின் நலன்களை பேணி காக்க வேண்டியவர்கள் பாஜக, தோழமை கட்சியினர் தான் என பதிலடி கொடுத்துள்ளார்.
Similar News
News October 27, 2025
கூவி கூவி அழைக்கும் அதிமுக? செல்லூர் ராஜு பதிலடி

கூட்டணிக்கு வாங்க என்று தவெகவை கூவி கூவி அதிமுக அழைப்பதாக TTV தினகரன் விமர்சித்திருந்தார். இதுதொடர்பான கேள்விக்கு, அரசியலில் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக அதிமுகவை TTV தினகரன் விமர்சிப்பதாக செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. சரியான நேரத்தில் யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை சீட் என்பது குறித்து இபிஎஸ் முடிவு செய்வார் எனவும் தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
Certificates தொலைஞ்சிடுச்சா? இதுல ஈஸியா வாங்கிக்கலாம்

தமிழக அரசின் e-pettagam செயலி உங்களிடம் இருந்தால் போதும். தொலைந்து போன உங்களுடைய 10,12-ம் வகுப்பு சான்றிதழ்கள், உயர்கல்வி, பட்டய படிப்பு சான்றிதழ்களை எளிதாக டவுன்லோடு செய்துகொள்ள முடியும். அத்துடன் ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வாரிசு சான்றிதழ் கூட பதிவிறக்கம் செய்யலாம். அனைவருக்கும் பயன்படட்டுமே SHARE THIS.
News October 27, 2025
உலகின் மிகவும் பிரபலமான ஓவியங்கள் இதோ!

மனிதனின் ஆழமான எண்ணங்களை காகிதத்தில் வண்ணம் பூசி உயிர்பெற செய்யும் அதிசயமே ஓவியங்கள். டாவின்சி, வான்கோ, பிகாசோ என பல கலைஞர்கள் இந்த கலையை தங்களுக்கு சொந்தமாக்கி, உலகுக்கு பல அழியாத ஓவியங்களை தந்து சென்றுள்ளனர். அப்படி உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற, இன்றும் உயிர்ப்போடு இருக்கும் சில ஓவியங்களை காண மேலே ஸ்வைப் பண்ணுங்க…


