News March 18, 2024
கொங்கு மண்டலத்தை குறி வைத்த திமுக

கடந்த 40 ஆண்டுகளில் திமுகவுக்கு பெரிய அளவில் தேர்தல் வெற்றி கிடைக்காத பகுதி கொங்கு மண்டலம். குறிப்பாக 2016ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கு மிக முக்கிய காரணம் கொங்கு மண்டலத்தில் அடைந்த தோல்வி. 2021 சட்டப்பேரவை தேர்தல் வரை அது எதிரொலித்தது. இந்நிலையில், அந்த குறையை போக்கும் விதமாக பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தொகுதிகளில் திமுகவே நேரடியாக களம் காண்கிறது.
Similar News
News December 3, 2025
10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்.. வந்தது அப்டேட்

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் இம்மாதமே தொடங்கி வைக்கவுள்ளார். முதற்கட்டமாக 1 லட்சம் பேருக்கு வழங்கி, அதை தொடர்ந்து பிப். மாதத்திற்குள் 10 லட்சம் பேருக்கு கொடுத்து முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 8GB ரேம், 256 GB SSD ஹார்டு டிஸ்க், கோபிலட் என்ற AI உள்ளிட்ட நவீன வசதிகள் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு லேப்டாப்பிற்கு TN அரசு ₹22,000 ஒதுக்கீடு செய்துள்ளது.
News December 3, 2025
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, <<18449919>>திருவண்ணாமலை, கன்னியாகுமரி<<>> ஆகிய மாவட்டங்களிலும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
இன்று 11 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியே சென்றால் குடையை தவறாமல் கையுடன் எடுத்துச் செல்லுங்க மக்களே!


