News July 6, 2025
திமுக, அதிமுகவிடம் இருந்து கற்க வேண்டும்: வானதி

பூத் கமிட்டியை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பதை திமுக, அதிமுகவிடம் இருந்து பாஜக கற்க வேண்டும் என்று MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்று வரும் பூத் கமிட்டி பயிலரங்கில் பேசிய அவர், வாக்கு சேகரிப்பில் இரு கட்சிகளும் பூத் மாஸ்டர்களாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். எனவே, அவர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு பாஜக மாஸ்டர்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Similar News
News July 7, 2025
பிரிக்ஸ் மாநாட்டில் பாகிஸ்தானை விளாசிய மோடி

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், ஆதரவாளர்களையும் ஒரே மாதிரி பார்க்கக்கூடாது என பிரிக்ஸ் மாநாட்டில் PM மோடி பேசியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய அவர், தீவிரவாத தடுப்பு என்பது வெறும் கண்துடைப்பாக இல்லாமல் கடுமையான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதோடு காஸா நிலை குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
தூத்துக்குடி மாவட்டம், சோளிங்கர் வட்டத்திற்கு லீவு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி இன்று (ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி வேலைநாளாகும். அதேபோல், யோக ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ராணிப்பேட்டையின் சோளிங்கர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறையாகும். SHARE IT.
News July 7, 2025
டாக்டராக ஆக வேண்டுமென்பது கனவு: மமிதா பைஜூ

‘ஜனநாயகன்’, ‘டியூட்’ படங்களில் நடித்து வரும் மமிதா பைஜூ டாக்டர் கனவு தனது வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாடி உள்ளது என்பது குறித்து பேட்டியளித்துள்ளார். அதில், சினிமாவில் நடிப்பதற்கு முன் டாக்டராக வேண்டுமென தான் கனவு கண்டதாகவும், ஆனால் சினிமாவில் நடிக்க வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் சினிமாவில் நடிக்க முயற்சி செய்த தனது தந்தை எதிர்பாராவிதமாக டாக்டராகி விட்டதாகவும் கூறினார்.