News March 16, 2024

2 தொகுதிகளை மாற்றுகிறது திமுக

image

திமுக கூட்டணியில் காங்., கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குமரி, விருதுநகர், ஆரணி, தேனி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவள்ளூரில் போட்டியிட வாய்ப்புள்ளது. திருச்சிக்கு பதிலாக மயிலாடுதுறை, கரூருக்கு பதிலாக ஈரோடு தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

Similar News

News March 20, 2026

தொகுதி மாறுகிறார்களா பாஜக முக்கிய தலைகள்?

image

பாஜகவின் 5 முக்கிய பிரமுகர்கள் இம்முறை தொகுதி மாற முடிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, அண்ணாமலை – அரவக்குறிச்சி டூ கோவை, வானதி – கோவை தெற்கு டூ கோவை வடக்கு, நயினார் – நெல்லை டூ சாத்தூர், தமிழிசை – விருகம்பாக்கம் டூ மயிலாப்பூர் என போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. மேலும் இங்கெல்லாம் தேர்தல் பணிகளை அவர்கள் முடுக்கிவிட்டதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News March 20, 2026

மகளை ஆபாச வீடியோ எடுத்து அனுப்பிய கொடூரத் தாய்!

image

6 வயது மகளை ஆபாசமாக போட்டோ, வீடியோ எடுத்து தனது காதலனுக்கு அனுப்பிய கொடூரத் தாய் மீது ‘போக்சோ’ பாய்ந்துள்ளது. ஓசூரில், இந்த அவலத்தை அரங்கேற்றியவர் பள்ளியில் பணிபுரியும் டீச்சர் என்பது மேலும் கொடுமையானது. தன்னை விட வயதில் குறைந்த 25 வயதான குறளரசனுடன் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணிடம் இருந்து குழந்தையை போலீசார் மீட்டனர். அந்த இளைஞர் மீதும் தற்போது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது. இப்படியும் ஒரு தாயா?

News March 20, 2026

உறுதியாக ‘NO’ சொன்ன இபிஎஸ்

image

பாஜக, தவெகவுடன் கூட்டணி பேசவில்லை என இருதரப்பினரும் மறுத்தாலும், திரைமறைவில் பேச்சு நடந்ததாக கூறப்படுகிறது. திமுகவை எப்படியாவது வீழ்த்திட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டதாம். ஆனால், விஜய்க்கு கொஞ்சம் இடம்கொடுத்தாலும், நீண்டகால அடிப்படையில் அதிமுகவுக்கு பாதகமாகிவிடும் என்பதால் EPS அதை உறுதியாக மறுத்துவிட்டாராம். புதிதாக இன்னொருவரை ஏன் வளர்த்துவிட வேண்டும் ன அவர் நினைக்கிறாராம். உங்க கருத்து?

error: Content is protected !!