News July 6, 2025
திமுக ஆட்சி வீழ்ச்சியடைவது உறுதி: ஓபிஎஸ் எச்சரிக்கை

அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஓபிஎஸ் ஆறுதல் கூறினார். இதன்பின் அவர், காவல் துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, அத்துமீறி செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, இந்த சூழ்நிலை மாறவில்லை என்றால், திமுக ஆட்சி வீழ்ச்சியடைவது உறுதி என்று எச்சரித்த அவர், காவல் துறை அதிகாரிகளின் விருப்பப்படியே இந்த ஆட்சி நடப்பதாக விமர்சித்தார்.
Similar News
News July 6, 2025
முடிவுக்கு வருகிறதா பாமக பிரச்னை?

ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதலால் பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், ஜூலை 8-ல் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இதனால், தந்தை – மகன் இடையே இருக்கும் பிரச்னை முடிவுக்கு வரவிருப்பதாக பாமக வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால், கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை.
News July 6, 2025
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்: புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து விளம்பரங்களிலும் திட்டத்தின் பதிவு எண், க்யூ ஆர் கோடு, குழும முகவரி இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டப் பகுதியின் முகவரியை திட்ட அனுமதியில் உள்ளது போன்று தெரிவிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
News July 6, 2025
குழந்தை பெறும் பள்ளி மாணவிகளுக்கு ₹1 லட்சம்

ரஷ்யாவில் மக்கள்தொகையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், குறிப்பிட்ட 10 பகுதிகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பள்ளி மாணவிகளுக்கு இந்திய மதிப்பின்படி ₹1.05 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. முன்பு இது 18+ பெண்களுக்கு மட்டுமே இருந்த நிலையில், தற்போது பள்ளி மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.