News March 17, 2024
தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.656 கோடி பெற்ற திமுக

தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக ரூ.656 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ள விவரங்களில், திமுக ரூ.656.5 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்றிருப்பதாகவும், இதில், லாட்டரி கிங் சான்டியாகோ மார்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனத்திடம் இருந்து பெற்ற ரூ.509 கோடியும் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News April 6, 2025
CSKக்கு பெரும் பின்னடைவு

5 முறை சாம்பியனான CSK நடப்பு சீசனில் 3வது தோல்வியை நேற்று சந்தித்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்துக்கு CSK சென்றது. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் சென்னை அணி எப்படி தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வரப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. தோனி, ஜடேஜா, அஸ்வின் போன்ற மூத்த வீரர்களின் செயல்பாடு மோசமாக உள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.
News April 6, 2025
வக்ஃப் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
News April 6, 2025
அமேசான் வசமாகுமா டிக்-டாக்? தீவிர பேச்சுவார்த்தை

டிக்-டாக் செயலியின் USA செயல்பாட்டை தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என அதன் தாய் நிறுவனமான சீனாவின் பைட் டேன்ஸ்க்கு டிரம்ப் கெடு விதித்துள்ளார். இல்லையேல் டிக்-டாக்கிற்கு தடை விதிக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதையடுத்து, டிக்-டாக்கை வாங்குவது தொடர்பாக அமேசான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.