News December 19, 2024
அமித்ஷாவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா, அம்பேத்கர் பெயரை முழக்கமிடுவது ஃபேஷன் எனக் கூறியது சர்ச்சையானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுகவினர் அம்பேத்கர் புகைப்படம் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News September 7, 2025
வீட்டு மின் இணைப்பு.. அரசு புதிய அறிவிப்பு

முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. அதேநேரம், விற்பனை பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்றவற்றில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, கோர்ட் தீர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும். வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு காத்திருப்போருக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News September 7, 2025
ஆப்கன் அமைச்சரின் இந்திய பயணம் ரத்து

ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகியின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காரணம், அனைத்து முன்னணி தலிபான் தலைவர்களுக்கும் எதிராக ஐ.நா.,வின் பாதுகாப்பு கவுன்சில் பயணத் தடை விதித்துள்ளது. எனவே, முத்தாகியின் இந்திய பயணத்துக்கு விலக்கு அளிக்கப்படவில்லை.
News September 7, 2025
உடல் பருமனை குறைக்க இந்த ஒரு தேநீர் போதும்!

சிறுநீரக பிரச்னைகளுக்கும், உடல் பருமனை குறைக்கவும், பளபளப்பான சருமத்திற்கும் செம்பருத்தி டீ பருகலாம் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
செய்முறை:
*செம்பருத்தி இதழ்களை பறித்து, நன்றாக உலற வைக்கவும். அதனை 3-5 நிமிடங்கள் வரை கொதிக்கும் நீரில் சேர்த்து ஊற வைக்கவும்.
*இந்த சாறை வடிகட்டி, தேவைப்பட்டால் தேன் கலந்து பருகுங்கள். இதனை குளிர்ச்சியாகவோ, சூடாகவோ பருகலாம். SHARE IT.