News April 3, 2024
திமுக திட்டங்கள் உலகத்துக்கே முன்னோடி

திமுக திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே முன்னோடியாக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரக்கோணத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “தமிழகத்தைப் போல கனடாவிலும் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பெருமிதமான தருணம். காலை உணவுத் திட்டத்தால் 16 லட்சம் குழந்தைகள் பயன் அடைகிறார்கள். பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக தான் திமுக உழைக்கிறது” என கூறியுள்ளார்.
Similar News
News November 1, 2025
RSS-ஐ தடை செய்ய வேண்டும்: கார்கே

இந்தியாவில் ஏற்படும் பெரும்பாலான சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், பாஜக – RSS காரணமாகவே உருவாவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டினார். எனவே, RSS அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI), முஸ்லிம் லீக், Jamiat Ulema-e-Hind ஆகியவற்றின் மொழிகளையே கார்கே பேசுவதாகவும் சாடியுள்ளது.
News November 1, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 1, ஐப்பசி 15 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: கிழக்கு▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
News November 1, 2025
வெனிசுலா மீது USA ராணுவ தாக்குதலா?

USA-ல் போதைப்பொருள்கள் ஊடுருவுவதற்கு வெனிசுலாவை டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில் ஓரிரு நாள்களில் வெனிசுலா மீது ராணுவ தாக்குதல்களை நடத்தும்பொருட்டு, அந்நாட்டு கடல் பகுதிக்கு அருகே USA, தனது படைகளை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை ‘No’ என்று ஒரே சொல்லில் டிரம்ப் மறுத்துள்ளார். கடந்த செப்டம்பரில் கரீபியன் கடலில், போதைப்பொருள் கப்பல் மீது USA தாக்குதல் நடத்தியது.


