News April 27, 2024
அமைச்சரவை மாற்றத்திற்கு லிஸ்ட்டை ரெடி செய்யும் திமுக

தேர்தல் முடிவுக்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்ய திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலில் உள்ளடி வேலை செய்ததால், வடமாவட்டத்தை சேர்ந்த அகிம்சைக்கு பெயர்போன மகாத்மா பெயரை தாங்கியவரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதாம். அமைச்சர் பதவி மட்டுமல்ல அவரின் மா.செ பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதேபோல், கொங்கு, தென் மாவட்ட அமைச்சர்கள் பெயர்களும் லிஸ்ட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
Similar News
News February 3, 2026
நாகை: மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாகை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டமானது மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நாகை, நாகூர், திருமருகல், திருப்பூண்டி, திருக்குவளை, கீழ்வேளூர், வேதாரண்யம், விழுந்தமாவடி, வாய்மேடு, கரியாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 3, 2026
பிரபல இசையமைப்பாளர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

பழம்பெரும் இசையமைப்பாளர் SP வெங்கடேஷ்(70) மாரடைப்பால் காலமானார். கிட்டார் கலைஞராக இசைப் பயணத்தை தொடங்கிய அவர், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘உனக்காக என் காதல்’, ‘பிஞ்சு மனசு’ உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ள வெங்கடேஷ், ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நாளை நடைபெறவுள்ளது. RIP
News February 3, 2026
வரியை குறைக்க வைத்த இந்தியாவின் ராஜதந்திரம்

இந்தியாவை ‘Tariff King’ என விமர்சித்த US அதிபர் டிரம்ப், தற்போது நண்பர் என்று கூறி வரியை குறைத்துள்ளார். US-ன் கூடுதல் வரிவிதிப்புக்கு பிறகு இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்தது போன்றவை USA-ஐ கலங்கடித்திருக்கலாம் எனப்படுகிறது. அதன் காரணமாகவே, US அதிபர் வரியை 50%-ல் இருந்து 18%-ஆக குறைத்து அறிவித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.


