News February 28, 2025

திமுக மொழி அரசியல் செய்யவில்லை: உதயநிதி

image

அமித்ஷா திமுகவை விமர்சனம் செய்ததை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார்.
தொகுதி வரையறை பற்றி அமித்ஷா கோவையில் பேசியதை, நாடாளுமன்றத்திலும் பேச வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மும்மொழி கொள்கையை வைத்து அரசியல் செய்யவில்லை என்றும், தங்கள் உரிமையை மட்டுமே கேட்பதாகவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Similar News

News February 28, 2025

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு: கவர்னர்

image

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் கைவிடப்பட்ட கொள்ளைப்புறம் போல் கண்டுகொள்ளப்படாமல் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். தென்மாவட்ட தொழில்முனைவோர், கல்வியாளர்களுடன் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், தொழில்துறைக்கான வாய்ப்புகள் ஏராளமாக இருந்தும் மக்களுக்கு அது தரப்படவில்லை என சாடினார். தென்மாவட்ட இளைஞர்களிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்திருப்பதும் கவலையளிக்கிறது என்று கூறினார்.

News February 28, 2025

தங்கம் விலை 3வது நாளாக கடும் வீழ்ச்சி

image

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து 3ஆவது நாளாக சரிவைக் கண்டுள்ளது. மாதத்தின் கடைசி நாளான இன்று (பிப்.28) சவரனுக்கு ₹400 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹7,960க்கும், சவரன் ₹63,680க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹105க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,05,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை குறைவது குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.

News February 28, 2025

CUET நுழைவுத்தேர்வு: அட்டவணை வெளியீடு

image

மத்திய பல்கலை.களில் PG படிப்புகளில் சேர்வதற்கான CUET நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் 13 முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை முதுநிலை படிப்புகளுக்கான CUET தேர்வு கணினி வழியில் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் உள்ளிட்ட விவரங்களை www.nta.ac.in என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம். SHARE IT.

error: Content is protected !!