News June 27, 2024

‘நீட் ஒழிக’ என முழக்கமிட்ட திமுக எம்.பி.,க்கள்

image

நுழைவு & போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு பிரச்னைகளை களைய கட்சி, அரசியலைத் தாண்டி ஒன்றிணைய வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேண்டுகோள் விடுத்தார். வினாத்தாள் கசிவதை தடுக்க, கடும் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை அரசு இயற்றி உள்ளதெனக் கூறிய அவர், புதிய மருத்துவக் கல்லூரிகள் பற்றி பேசியபோது, திமுக (மக்களவை & மாநிலங்களவை) எம்.பி.,க்கள் ‘நீட் ஒழிக’ என முழக்கமிட்டனர்.

Similar News

News March 2, 2026

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வரத்து பாதிப்பா?

image

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் உலகளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் 10-15 நாள்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாகவும், வரத்து தடைபடாமல் இருக்க USA, மேற்கு அப்ரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் மாற்று திட்டங்களை இந்தியா செயல்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

News March 2, 2026

ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்!

image

*இந்த உலகை நாம் தவறாகப் படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுகிறது என்று சொல்கிறோம் *மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது, ஆனால் எளிமையாக இருப்பது மிகவும் கடினம் *வெறுமனே தண்ணீரை உற்றுப்பார்த்துக் கொண்டே நிற்பதன் மூலம் உங்களால் கடலைக் கடக்க முடியாது *எல்லோரும் தம்மை விட்டு வேறு யாரையோ சீர் திருத்த முயல்கிறார்கள் *ஒற்றையாக இருக்கும் பூ, ஏராளமாக இருக்கும் முட்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டியதில்லை

News March 2, 2026

ஈரானை திட்டமிட்டே தாக்கினாரா டிரம்ப்?

image

அணு ஆயுத ஒப்பந்தம் இறுதியாகும் தருணத்தில் USA தங்களது நாட்டை தாக்கிவிட்டதாக ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச உறவுகளை டிரம்ப் அழித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். ஜெனிவா கூட்டத்தில் அணு ஆயுத ஒப்பந்தம் இறுதியாகியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, ஒப்பந்தத்திற்கு ஈரான் தயாராக இருந்தாலும் டிரம்ப் திட்டமிட்டே தாக்க உத்தரவிட்டதாக ஈரானிய ஊடகங்கள் சாடுகின்றன.

error: Content is protected !!