News March 13, 2025
நாளை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை(மார்ச் 14) திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 6.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், தொகுதியில் கள நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 14, 2025
பிரபல வீரருக்கு IPL-லில் விளையாட 2 ஆண்டுகள் தடை

ஐபிஎல் விதிகளை மீறியதற்காக இங்கிலாந்து வீரர் ஹாரி புருக்குக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. நடப்பாண்டு IPLல சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் ₹6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர், இறுதி நேரத்தில் தன்னால் அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என தெரிவித்தார். இது விதிகளுக்கு புறம்பானது என்பதால் ஹாரி புருக் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
News March 14, 2025
லடாக், இமாச்சலில் நிலநடுக்கம்

லடாக்கின் கார்கிலில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. கார்கிலில் அதிகாலை 2.50 மணிக்கு பூமிக்கடியில் 15 கி.மீ ஆழத்தில் மையமாக கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் ஜம்மு – காஷ்மீர், இமாச்சல் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்க பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
News March 14, 2025
18ம் படி ஏறியதும் பகவான் தரிசனம்! இன்று முதல் அமல்

சபரிமலையில் பங்குனி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. தொடர்ந்து நாளை முதல் வரும் 19 ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இம்மாதம் முதல் தரிசனத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, 18ஆம் படியேறியதும் கொடிமரம் வழியாக சென்று நேரடியாக ஐயப்பனை தரிசிக்கலாம். இதன் மூலம் பக்தர்களுக்கு ஐயப்பனை தரிசிப்பதற்கான நேரம் கூடுதலாக கிடைக்கும்.