News April 3, 2025
திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு பட்டையுடன் பேரவைக்கு வருகை

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் கருப்பு பட்டை அணிந்தவாறு சட்டப்பேரவைக்கு வருகை புரிந்துள்ளனர். இந்த மசோதா நேற்று இரவு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
Similar News
News April 4, 2025
‘கூலி’ படத்தின் மாஸ் அப்டேட் இன்று

ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாக உள்ளதாக அப்படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியா அல்லது டிரெய்லர் குறித்த அப்டேட்டா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எது வந்தாலும் சரி என கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், இசைப்பணிகளும் முடிந்துவிட்டன.
News April 4, 2025
இத பண்ணா… திருப்பதியில் வாழ்நாள் சிறப்பு தரிசனம்!

பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாழ்நாள் முழுக்க சிறப்பு தரிசனம் செய்ய தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கினால், வாழ்நாள் முழுவதும் ஆண்டுக்கு 4 முறை சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்களாம். ஒவ்வொரு முறையும் வேத ஆசிர்வாதம், 5 கிராம் தங்கம், 50 கிராம் வெள்ளி டாலர் வழங்கப்படுமாம். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?
News April 4, 2025
IPL-ல் வரலாறு படைத்த KKR

3 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக 20 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற சாதனையை கொல்கத்தா அணி படைத்துள்ளது. ஹைதராபாத் அணியுடனான நேற்றையை போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், SRH எதிராக 20 வெற்றிகளை கொல்கத்தா அணி பதிவு செய்துள்ளது. அதேபோல், பஞ்சாப் அணிக்கு எதிராக 21 வெற்றிகளையும், பெங்களூரு அணிக்கு எதிராக 20 வெற்றிகளையும் அந்த அணி பதிவு செய்துள்ளது.