News June 19, 2024

திமுக அமைச்சருக்கு தொடர்பு: அண்ணாமலை

image

23 உயிர்களை பறித்த மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம் நடந்த ஓர் ஆண்டில், கள்ளக்குறிச்சியில் மீண்டும் அதேபோன்ற சம்பவத்தில் 5 பேர் பலியானதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். கள்ளச்சாராய வியாபாரிகளுடன் அமைச்சர் மஸ்தான் தொடர்பில் இருப்பது தெரிந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். மஸ்தானையும், விற்பனையை தடுக்காத அமைச்சர் முத்துசாமியையும் பதவி நீக்கும்படியும் அவர் வலியுறுத்தினார்.

Similar News

News March 20, 2026

BREAKING: திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறார்

image

தவாக, திமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளது. 4 நாள்களுக்கு முன்னர் திமுக தலைமைக்கு, வேல்முருகன் வைத்த தேர்தல் வாக்குறுதிகள், கூடுதல் சீட்டுகள் தொடர்பான <<19389138>>கோரிக்கைகளில்<<>> உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், 100 தொகுதிகளில் தவாக வேட்பாளர்களை தனித்து களமிறக்க வேல்முருகன் முடிவு எடுத்துள்ளார். அதேநேரம், இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

News March 20, 2026

தர்பூசணி சின்னத்தால் புதுவை அரசியலில் புதிய புயல்

image

ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் LJK கட்சிக்கு தர்பூசணி சின்னத்தை ECI ஒதுக்கியுள்ளது. முன்னதாக, LJK-வை NDA-வில் கொண்டுவருவதை CM ரங்கசாமி விரும்பாததால் தொகுதிப் பங்கீடு இழுபறியில் உள்ளது. கடைசிவரை ரங்கசாமி பிடி கொடுக்கவில்லையென்றால், <<19405426>>பாஜக<<>>, பாமக, அதிமுக, LJK-வுடன் கூட்டணி அமைக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், LJK-வுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது புதுவை அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

News March 20, 2026

அண்ணா நகர் சொத்தை இழந்த விஜய்!

image

சென்னை, அண்ணா நகரில் உள்ள தனது சொத்தை விஜய், ₹35 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக The Week நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், சில சொத்துக்களையும் அவர் விற்க முயன்று வருகிறாராம். விவாகரத்து வழக்கில் அடுத்த மாதம் 20-ம் தேதி அவர் ஆஜராகும்போது, சொத்து விவரங்கள் கணக்கீடு செய்யப்படும் என்பதற்காகவும், பேரவைத் தேர்தல் செலவுக்காகவும் அவர் தனது சொத்துக்களை விற்கத் தொடங்கியுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.

error: Content is protected !!