News August 9, 2025
திமுக உறுப்பினர் சேர்க்கை நீட்டிப்பு? 13ல் ஸ்டாலின் முடிவு

ஆக.13-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்கிறார். இதில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும்போது OTP பெறக்கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால், புதிய உறுப்பினர் சேர்க்கையில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 13-ம் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையை நீட்டிக்கலாமா என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசிக்கிறார்.
Similar News
News August 9, 2025
NEP விதி; SEP மதி: அன்பில் மகேஸ் விளக்கம்

தேசிய கல்விக் கொள்கை(NEP) விதி, ஆனால் மாநிலக் கல்விக் கொள்கை(SEP) மதி என அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். NEP-யை காப்பி அடித்து SEP உருவாக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், ஒரு சில திட்டங்களின் சாயல்கள் ஒன்றாக இருந்தாலும் அதன் செயல்பாடுகள் வேறு என அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மேலும், பிற்போக்குத்தனமான செயல்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை என மறுத்துள்ளார்.
News August 9, 2025
விண்வெளி சாதனை நாயகன் காலமானார்!

விண்வெளி வீரர் ஜிம் லொவல்(97) காலமானார். நிலவுக்கு சென்ற அப்போலோ 13 விண்வெளி பயணத்தின் தளபதியாக பணியாற்றிய இவர், சுமார் 715 மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளியில் இருந்துள்ளார். 1962-ம் ஆண்டு NASA-வில் பணிக்கு சேர்ந்த ஜிம், ஜெமினி 7 & ஜெமினி 12 விண்வெளி பயணங்களிலும் பணிபுரிந்துள்ளார். ஒரு தலைமுறைக்கே முன்மாதிரியாக திகழ்ந்த ஜிம் லொவலின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News August 9, 2025
விவாதமாக மாறிய திருமாவின் சர்ச்சை பேச்சு

MGR குறித்து திருமா விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. உண்மையில் MGR பார்ப்பனர்களுக்கு ஆதரவாக செயல்பட்டாரா அல்லது எம்ஜிஆரை முன்னிறுத்தி அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த திட்டமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். இத்தனை ஆண்டுகள் கழித்து MGR குறித்து திருமா விமர்சனம் செய்ய வேண்டியது ஏன்; திருமாவின் விமர்சனம் ஏற்புடையதா என சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது.