News August 6, 2025
கூட்டணிக் கட்சிகள் குறித்து பேச திமுகவினருக்கு தடை

திமுக தலைமை அறிவுறுத்தலின்பேரில், மதுரை MP சு.வெங்கடேசன் & கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக பேச திமுகவினருக்கு தடைவிதித்து மதுரை மாவட்டச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அரசியல் லாப நோக்கத்திற்காக சமரசம் செய்யப்படுவதாக ஆளும் கட்சியினர் குறித்து சு.வெ அறிக்கை வெளியிட்டதற்கு எதிராக திமுக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 6, 2025
கொல்லப்பட்ட SI குடும்பத்துக்கு ₹30 லட்சம் நிதியுதவி: CM

உடுமலை அருகே படுகொலை செய்யப்பட்ட SI குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததோடு, ₹30 லட்சம் நிதியுதவியையும் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அடிதடி பிரச்னையை விசாரிக்கச் சென்ற SI சண்முகவேலை 3 பேர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் போலீசாருக்கு CM உத்தரவிட்டுள்ளார்.
News August 6, 2025
2027 WC-ல் Ro-Ko விளையாடுவார்களா?

T20 & டெஸ்டில் ஓய்வு பெற்று விட்ட நிலையில், Ro-Ko ஜோடி 2027 உலக கோப்பையை குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அப்போது ரோஹித் 40, கோலி 38 வயதை எட்டியிருப்பார்கள் என்பதால், ஃபிட்னஸ், ஃபார்ம் குறித்து கேள்விகள் எழுவது இயல்பே. இதன் காரணமாக, BCCI இளம் வீரர்களை தயார்படுத்தும் திட்டத்தில் இருப்பது வியக்கத்தக்கது அல்ல. இதுகுறித்து, இன்னும் முடிவெடுக்கப்படாத நிலையில், 2027 WC-ல் Ro-Ko விளையாடுவார்களா?
News August 6, 2025
நாள் முழுவதும் ஃபிரெஷ்ஷா இருக்க.. இத குடிங்க!

தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் சூடான எலுமிச்சை தண்ணீர் குடிப்பது, செரிமானத்தை சீராக்கி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சை சாறு, கொஞ்சம் மஞ்சள் பொடி கலந்து குடிக்கவும். கல்லீரல் சுத்தத்திற்கும் இந்த ஜூஸ் தான் பெஸ்ட்டு. காலையில் இதை குடித்தால் போதும், நாள் முழுவதும் ரொம்ப ஃபிரெஷ்ஷா இருப்பீங்க. ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க!