News August 16, 2025
திமுக தலைவர்களை அச்சுறுத்த முடியாது: கனிமொழி

அமைச்சர் ஐ.பெரியசாமிக்குச் சொந்தமான இடங்களில் ED சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய கனிமொழி, IT, ED, CBI ஆகியவற்றை எதிர்க்கட்சிகளை தாக்கும் கருவியாக தொடர்ந்து பாஜக பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார். திமுக இதனை எதிர்கொள்ளும் என்ற அவர், இதுபோன்ற பயமுறுத்தல்களால் திமுக தலைவர்களை அச்சுறுத்த முடியாது என்றும் காட்டமாக தெரிவித்தார்.
Similar News
News March 4, 2026
மகளிர் தினத்தில் வெளியாகும் தவெக தேர்தல் அறிக்கை?

தமிழக தேர்தல் களத்தில் திமுக, அதிமுக உள்ளிட்டவை தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தனித்து களம் காணும் விஜய்யின் தவெக, அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது. அதன்படி சர்வதேச மகளிர் தினமான வரும் மார்ச் 8-ம் தேதி தேர்தல் அறிக்கையை விஜய் வெளியிட உள்ளாராம். அதில் மகளிரை குறிவைத்து பல திட்டங்கள் இருக்கும் என சொல்லப்படும் நிலையில், நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
News March 4, 2026
தேர்தல் வாக்குறுதிகள்.. EPS முக்கிய அறிவிப்பு

அனைத்து குடும்பத்தினருக்கும் கருணைத் தொகை ₹10,000, மகளிருக்கு மாதந்தோறும் ₹2,000 உள்பட 3 கட்ட வாக்குறுதிகளை அதிமுக அளித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை வார்டு வரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று தொண்டர்களுக்கு EPS உத்தரவிட்டுள்ளார். இன்று நடைபெற்ற அதிமுக மா.செ., ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
News March 4, 2026
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. மகிழ்ச்சியான செய்தி

2021 தேர்தலின்போது 5 சவரன் தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. இது, சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு தள்ளுபடியும் செய்யப்பட்டது. இந்நிலையில், 2026 தேர்தலை முன்னிட்டு, நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வெளியாகலாம் என மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதேநேரம், இதை எதிர்பார்த்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் மக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.


