News June 4, 2024

அரக்கோணத்தில் திமுக முன்னிலை

image

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அரக்கோணம் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்து வருகிறார். பாமக வேட்பாளர் பாலு 2ஆவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் விஜயன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

Similar News

News September 21, 2025

கபடி போட்டியை துவக்கி வைத்த எம்எல்ஏ செந்தில்பாலாஜி!

image

கரூர் மாவட்டம், பெரியாண்டாங்கோவில் குடித்தெருவில், கரூர் பெரியாண்டாங்கோவில் கிளை கழகம் மற்றும் உதயா பிரதர்ஸ் கபாடி குழு இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு கபாடி போட்டி நேற்று இரவு தொடங்கியது. இந்தக் கபாடி போட்டியை கரூர் சட்டமன்ற உறுப்பினரும், வி. செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். அப்போது, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News September 21, 2025

EPS – நயினார் சந்திப்பு: பின்னணி என்ன?

image

சேலத்தில், EPS-ஐ அவரது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார். கடந்த வாரம் டெல்லி சென்று அமித்ஷாவை EPS சந்தித்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதில், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், KP ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அக்.1 முதல் நயினார் தனது பரப்புரையை தொடங்கவுள்ள நிலையில், அதற்கு அழைப்பு விடுக்கவே இந்த சந்திப்பு என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

News September 21, 2025

நடிகர் ரோபோ சங்கரின் நிறைவேறாத ஆசை

image

மறைந்த ரோபாே சங்கர் மகள் இந்திரஜாவின் குழந்தைக்கு இன்று உசிலம்பட்டி அருகே காதணி விழா நடைபெறவிருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தானே முன்னின்று பார்த்து பார்த்து செய்த ரோபோ சங்கர், பேரனை தனது மடியில் வைத்து காது குத்த வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் இருந்தார். ஆனால், எமன் அவரை விட்டுவைக்கவில்லை. அவரது ஆசை நிராசை ஆனதால், விழாக்கோலம் பூண வேண்டிய வீட்டில் சோக மேகம் சூழ்ந்தது.

error: Content is protected !!