News April 4, 2025
கச்சத்தீவு கைவிட்டுப் போக காரணமே திமுகதான்: விஜய்

கச்சத்தீவு மீண்டும் நமக்கு சொந்தமாவது மட்டும்தான் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு ஒரே பரிகாரம், தீர்வு என விஜய் தெரிவித்துள்ளார். திமுகவின் ஆட்சி அதிகார பசியால் கச்சத்தீவு கைவிட்டு போனதாக குற்றம் சாட்டிய அவர், நிரந்தர தீர்வு எட்டும்வரை 99 வருட குத்தகையாக கச்சத்தீவை பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கை செல்லும் PM மோடி இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 15, 2025
பாலிவுட் வரை சிரிக்க வைத்த வடிவேலு

‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் குலசேகர ராஜாவாக நடித்தவர் குல்ஷன் தேவய்யா. பாலிவுட் நடிகரான இவர், 2018-ல் தான் நடித்த ‘Mard Ko Dard Nahi Hota’ என்ற படத்தில் வடிவேலுவை போல செய்ததை நினைவுகூர்ந்துள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தென்னிந்திய சினிமா பற்றி பேசிய அவர், ‘ஹய்யோ ஹய்யோ’ என்ற வடிவேலுவின் டயலாக்கை தான் பயன்படுத்தியதாகவும், அவரது முக பாவனைகள் தனக்கு பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
பின் வாங்கினார் பிரசாந்த் கிஷோர்

பிஹார் தேர்தல் நவ.6 மற்றும் நவ.11 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. இந்த தேர்தலில் பிரஷாந்த் கிஷோர் போட்டியிடுவார் என கூறப்பட்டது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும், ஜன் சுராஜ் கட்சிக்கான களப்பணிகளில் மட்டுமே ஈடுபடவுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
News October 15, 2025
காஸா போர் முடிவுக்கு வருவதில் சிக்கலா?

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹமாஸுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். காஸா போர் நிறுத்தம் குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையிலேயே ஆயுதங்களை கைவிடுவதற்கு தயக்கம் காட்டியது ஹமாஸ். இந்நிலையில், ஆயுதங்களை கைவிடுங்கள் இல்லையெனில் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார். மேலும், ஹமாஸ் ஒத்துழைக்காவிட்டால் USA ராணுவ நடவடிக்கையை எடுக்கும் எனவும் கூறியுள்ளார்.