News April 6, 2024

ரம்மி நிறுவனத்துடன் பணம் வாங்கிய கட்சி திமுக

image

நடிகர் திலகம் உயிருடன் இருந்திருந்தால், ஸ்டாலின் நடிப்பைப் பார்த்து மயங்கி விழுந்திருப்பார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலினுக்கு தில் இருந்தால், கடந்த 3 ஆண்டுகளில் கொண்டு வந்தத் திட்டங்கள் குறித்து என்னுடன் விவாதிக்க தயாரா?. இடத்தைச் சொல்லுங்கள். நானே வருகிறேன். ஆன்லைன் ரம்மி நிறுவனத்துடன் கூட பணம் வாங்கிய கட்சி திமுக” என கடுமையாக சாடியுள்ளார்.

Similar News

News August 23, 2025

மூத்த அரசியல் தலைவர் காலமானார்

image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி (83) உடல்நலக்குறைவால் காலமானார். ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது. நல்கொண்டா தொகுதியில் இருந்து இரண்டு முறை மக்களவைக்கு தேர்வான சுதாகர் ரெட்டி, 2012 -19 வரை இந்திய கம்யூ., கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

News August 23, 2025

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனம்

image

இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான தூதராகவும் செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். இவர் அரசுப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதாகவும் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், கடந்த ஜன.20 முதல் ஜோர்கன் கே ஆண்ட்ரூஸ் இந்தியாவில் உள்ள USA தூதரகத்தின் இடைக்கால பொறுப்பாளராக உள்ளார்.

News August 23, 2025

கூட்டணி ஆட்சி குழப்பம்.. அதிமுக மா.செக்கள் கூட்டம்

image

ஆக.30-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்ததில் மூத்த நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், இக்கூட்டம் நடைபெறவுள்ளது. அத்துடன் நேற்று நடைபெற்ற BJP பூத் கமிட்டி மாநாட்டில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா பேசியது மீண்டும் கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

error: Content is protected !!