News August 5, 2025
அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஒரே எதிரி திமுக: நயினார்

தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒன்றுகூடி கலந்தாலோசித்து முடிவு செய்வோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., பாஜக கூட்டணிக்கு ஒரே எதிரி திமுக தான் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். கூட்டணியில் இருந்து விலகிய OPS குறித்து பேச விரும்பவில்லை என தெரிவித்த நயினார் தேர்தல் பணியில் முழுவீச்சில் பாஜக இறங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News August 5, 2025
அமளி நீடித்தால் விவாதமே கிடையாது: கிரண் ரிஜிஜூ

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள எதிர்க்கட்சிகள், இதுகுறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி, நாடாளுமன்றத்தை முடக்கின. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தால், விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரித்துள்ளார்.
News August 5, 2025
கேப்டன் கில்.. எவ்வளோ மார்க் கொடுப்பீங்க?

ENG டெஸ்ட் தொடர் நடந்து முடிந்து விட்ட நிலையில், இதில் இந்திய கேப்டன் சுப்மன் கில் சீனியர்களால் பாராட்டப்பட்டு வருகிறார். 3 முறை 100+ ரன்கள், ஒரு 250+ ரன்கள் என ரன்குவிப்பில் அடுத்தடுத்து பல ரெக்கார்டுகளை முறியடித்த கில், கேப்டனாகவும் களத்தில் ஆக்ரோஷமாகவே செயல்பட்டார். ENG தொடரில் அவரின் பெர்பார்மென்ஸை நீங்க எப்படி பார்க்கிறீங்க?
News August 5, 2025
எனர்ஜி தரும் ABC ஜூஸ்!

1 ஆப்பிள், 1 சிறிய பீட்ரூட், 2 கேரட் ஆகியவற்றை சின்ன துண்டுகளாக நறுக்கி அரைத்து ஜூஸ் ஆக்கவும். வடிகட்டத் தேவையில்லை. வேண்டுமானால் எலுமிச்சைச்சாறு, புதினா சேர்த்துக்கலாம். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின்ஸ் A, B1, B2, B3, B4, B5, B6, B9, C, E, K, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் என ஏகப்பட்ட சத்துகள் இருக்கின்றன. மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் இந்த ஏபிசி ஜூஸ் பெரிதும் உதவுகிறது. SHARE IT.