News March 26, 2025
பெயரை கேட்டாலே திமுகவுக்கு பயம்: தினகரன்

தமிழக அரசியலில் அண்ணாமலை நெருப்பாக செயல்பட்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இப்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர், அண்ணாமலை எதிரிகளுக்கு அக்னியாக இருந்தாலும், பொதுமக்களுக்கும், நண்பர்களுக்கும் அண்ணாமலையார் தீபம் போன்று இருப்பதாகவும் பாராட்டியுள்ளார். அண்ணாமலை பெயரை சொன்னாலே திமுக நடுங்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 27, 2025
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்?

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் கொடுத்த வாக்குறுதியை வேத வாக்காக நினைத்துச் செயல்படுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீதி நியாயத்துக்குக் கட்டுப்படும் நீங்கள் தன்மானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். விசுவாசமான நீங்கள் நம்பிக்கை துரோகிகளை மன்னிக்கவே மாட்டீர்கள் என்று நந்தி வாக்கியம் கூறுகிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News March 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
News March 27, 2025
இனிமேல் இது கிரிக்கெட் கிடையாது: ரபாடா வேதனை

ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் எளிதாக 200 ரன்களை கடந்து விடுகிறது. இதனால், பவுலர்களுக்கான முக்கியத்துவம் குறைகிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில், குஜராத் அணியில் விளையாடும் ரபாடா, ‘இந்த போட்டியை இனிமேல் கிரிக்கெட் என்று கூறாதீர்கள், பேட்டிங் என்று கூறுங்கள்’ என ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மைதானமும் பிளாட் பிட்ச்சாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.