News October 9, 2025

உழவர் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: அன்புமணி

image

நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் 4 லட்சத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாகவும், ஏற்கெனவே கொள்முதல் செய்த 15 லட்சம் நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உழவர் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை எனவும் அன்புமணி சாடியுள்ளார்.

Similar News

News October 9, 2025

தருமபுரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் இடங்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் இன்று (அக்.9) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பென்னாகரம் திருமல்வாடி விபிஆர்சி கட்டிடம் பண்ணைக்குளம், நல்லம்பள்ளி புயுல்ஸ் பெத்ரஹள்ளி பள்ளி வளாகம், காரிமங்கலம் விபிஆர்சி கட்டிடம் மோதூர், அரூர் சக்தி முருகன் திருமண மண்டபம் தீர்த்தமலை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 9, 2025

விஜய்யின் உயிர் நண்பன் சஞ்சீவ் சொன்ன தகவல்

image

விஜய்யின் நண்பர் சஞ்சீவ் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அவரிடம் கரூர் விவகாரம் தொடர்பான கேள்விகள் வைக்கப்பட்டது. அப்போது, சம்பவ இடத்தில் இல்லை என்பதால் தனக்கு அதை பற்றி பேச போதுமான அறிவு கிடையாது என அவர் சொன்னார். ஆனால், விஜய்க்கு எந்த பயமும் இல்லை எனவும், சரியான நேரம் வரும்போது களத்துக்கு அவர் செல்வார் எனவும் சஞ்சீவ் பதிலளித்தார்.

News October 9, 2025

சற்றுமுன்: அதிரடியாக கைது செய்தனர்

image

மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் <<17944206>>மருந்தால் 21 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் <<>>அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை போலீசார் உதவியுடன் மத்திய பிரதேச போலீசார் கோடம்பாக்கத்தில் வைத்து சற்றுமுன் கைது செய்தனர். அவரை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஆலைக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!