News March 25, 2024
திமுக கூட்டணியில் இல்லை

திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக அச்சிடப்பட்ட போஸ்டரில் இந்திய தேசிய லீக்கின் தடா ரஹிம் புகைப்படமும் இடம்பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், 3 ஆண்டுகளாக திமுகவை எதிர்த்து வருகின்றேன். அதுமட்டுமல்ல, இந்திய தேசிய லீக் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், எனது போட்டோவை ஏன் பயன்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News January 19, 2026
விஜய்யை பார்த்து எவ்வளவு பயம்: புகழேந்தி

EPS துரோகி என்ற பட்டம் பெற்றதால் மக்கள் அவரை ஏற்கவில்லை என பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். அதிமுக பலமிழந்து விட்டதாக கூறிய அவர், தற்போது களத்தில் திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே தான் போட்டி என்றார். மேலும், ஜனநாயகனுக்கு சென்சார் அனுமதி மறுக்கப்பட்டதால், விஜய்யை பார்த்து எவ்வளவு பயம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது எனவும், இப்படத்தை வைத்து அரசியல் சூழ்ச்சி நடக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
ஒரே கோயிலில் 3 ரூபங்களில் காட்சி தரும் சிவன்

பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதராக என 3 ரூபங்களில் சீர்காழி சட்டைநாத சுவாமி கோயிலில் ஈசன் காட்சியளிக்கிறார். 3 அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். நடு அடுக்கில், தோணியப்பர் உள்ளார். 3-வது தளத்தில் சட்டநாதராக இறைவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
News January 19, 2026
காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுவையின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(ஜன.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் கடந்த 3 நாள்களாக நடந்த மலர் கண்காட்சி, கார்னிவல் விழாவின் நிறைவு நாளையொட்டி இந்த விடுமுறையானது விடப்பட்டுள்ளது.


