News September 12, 2025

பாஜக கொள்கையுடன் திமுக ஒத்துப்போகிறது: சீமான்

image

பாஜகவின் எல்லா கொள்கைகளோடும் திமுக ஆட்சி ஒத்துப்போவதாக சீமான் விமர்சித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து முதலில் பேரணி நடத்தியவர் CM ஸ்டாலின் என்றும் அதை ஆதரித்து உலகநாடுகளில் பிரதிநிதியாக பேசியவர் கனிமொழி எனவும் அவர் கூறினார். மேலும், பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது திமுக குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசியதாகவும். தற்போது கூட்டணியில் இல்லாததால் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

Similar News

News September 12, 2025

E20 பெட்ரோல் என்றால் என்ன? இதனால் என்ஜின் பழுதாகிறதா?

image

இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோலில், 20% எத்தனால் கலக்க வேண்டும் என்ற இலக்கு எட்டப்பட்டுவிட்டதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. E20 எனப்படும் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் என்றால் என்ன? இதனால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பா? இதற்கு அரசு கூறும் விளக்கம் என்ன? டீசலில் இந்த கலப்பு உள்ளதா என்பதை மேலே Swipe செய்து பாருங்கள். உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

News September 12, 2025

அண்ணாமலை புதிய முடிவு.. பாஜக அதிர்ச்சி

image

திமுகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இல்லை என அண்ணாமலை பேசியுள்ளது பாஜக தலைமையை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாள்தோறும் சட்டம் – ஒழுங்கு பிரச்னை, ஊழல் என திமுகவுக்கு எதிராக பாஜக, அதிமுக பரப்புரை செய்து வரும் வருகிறது. ஆனால், அதற்கு நேர்மாறாக அண்ணாமலை பேசியது புரியாமல் அவரது ஆதரவாளர்களே குழம்பியுள்ளனர். அண்ணாமலையின், இந்த பேச்சு குறித்து தலைமை விளக்கம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 12, 2025

வாட்டர் பாட்டில் மூடிகள் கலர் கலராக இருக்க காரணம்?

image

நாம் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில் மூடிகள் பல வண்ணங்களில் இருக்க காரணங்களை அறிந்து கொள்ளுங்கள். *நீலம்: இயற்கையான கனிம உள்ளடக்கத்தை கொண்டிருக்கும். *கருப்பு: ஆல்கலைன் நீர் அதாவது அதிக PH மதிப்பு கொண்டது. *வெள்ளை: பதப்படுத்தப்பட்ட வடிகட்டிய நீர் இருக்கும். *பச்சை: சுவை சேர்க்கப்பட்ட தண்ணீரை கொண்டிருக்கும். *சிவப்பு: இதில் எலக்ட்ரோலைட் மேம்படுத்தப்பட்ட தாதுக்களை அடங்கிய நீர் இருக்கும். SHARE IT.

error: Content is protected !!