News March 16, 2025

ஊழலில் திமுகவினர் வல்லவர்கள் : விஜய் அட்டாக்

image

டாஸ்மாக்கில் ₹1000 கோடி முறைகேடு குறித்து நியாயமாக விசாரிக்க விஜய் வலியுறுத்தியுள்ளார். ஊழலில் காட்டாற்றையே உருவாக்க வல்லவர்கள் என்பதே திமுகவின் ஆட்சி அதிகார வரலாறு என சாடிய அவர், அமலாக்கத்துறை கையில் அள்ளி இருப்பது ஆயிரம் கோடி என்ற கையளவு நீரே!, முழுமையாக விசாரணை நடத்தினால் சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் ( கீழ்மட்ட அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை) வரை சிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 16, 2025

கோவில் திருவிழாவில் கட்சி கொடி: விசாரணைக்கு உத்தரவு

image

கேரளாவில் கோவில் திருவிழாவின் போது கட்சிக் கொடி பறக்கவிடப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்த திருவிதாங்கூர் தேவசம் உத்தரவிட்டுள்ளது. கொல்லத்தில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோயிலில் CPM கொடி பறக்கவிடப்பட்டிருந்ததாக புகார் எழுந்திருந்தது. கேரளாவில் கோவிலுக்குள் அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்களை காட்சிப்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 16, 2025

AR.ரஹ்மான் குறித்து அப்போலோ அறிக்கை

image

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நிலை குறித்து சென்னை அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், நீர்ச்சத்து குறைபாடு காரணமாகத்தான் அனுமதிக்கப்பட்டதாக ஹாஸ்பிடல் தெரிவித்துள்ளது. சில பரிசோதனைகளுக்குப் பின் அவர் வீடு திரும்பினார் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 16, 2025

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு – சீமான் கருத்து இதுதான்!

image

தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி இருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகி இருக்கிறது. இதுகுறித்து பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு புகழ்பெற்ற கலைஞன் பொதுவெளிக்கு வரும்போது பாதுகாப்பு வழங்குவதில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என தெரிவித்துள்ள அவர், தாம் தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!