News March 10, 2025
பச்சோந்தி அரசியல் செய்கிறது திமுக: ஜெயக்குமார்

PM SHRI பள்ளிகள் விவகாரம் தொடர்பாக திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் ஜெயக்குமார். இதுகுறித்து பேசிய அவர், PM SHRI திட்டத்தை ஸ்டாலின் முதலில் ஏற்றுக்கொண்டதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதை சுட்டிக்காட்டினார். மேலும், இதிலிருந்து திமுக பச்சோந்தித்தனமான சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்வது உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News March 10, 2025
தமிழ்நாட்டில் பணிபுரிய தமிழ் அவசியம்: ஐகோர்ட்

தேனியில் இளநிலைப் பொறியாளராக இருந்த ஜெயக்குமார், தமிழ்த் தேர்வில் தோல்வி அடைந்ததால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை இன்று விசாரித்தது. அப்போது, தமிழகத்தில் பணிபுரிய தமிழ் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தமிழ் தெரியாமல் எதற்காக ஒருவர் தமிழகத்தில் வேலை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வினவினர்.
News March 10, 2025
Retirement பஞ்சாயத்த முடிச்சிவிட்ட ஜடேஜா…!

CT FINAL நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, இந்திய வீரர் ஜடேஜா ODI போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக செய்திகள் உலா வந்தன. தனது 10வது ஓவரை அவர் வீசி முடிந்த பிறகு, சக வீரர் கோலி கட்டியணைத்ததை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் யூகங்களை பதிவிட்டனர். இந்நிலையில், ஓய்வு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜடேஜா, ‘தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம், நன்றி’ என தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
News March 10, 2025
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

வரும் 12ஆம் தேதி (புதன்கிழமை) கும்பகோணம் மகாமக குளத்தில் மாசி மக தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து புனித நீராடுவது உண்டு. இதனையொட்டி அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதிற்கும் உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்ய வரும் 29ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.