News September 14, 2025
கடிதம் மூலம் கதறும் திமுக: விஜய்

‘விஜய் வெளியே வரவே மாட்டார்’ என்று ஆள் வைத்து கதையாடல் செய்தோர், இப்போது வெவ்வேறு விதங்களில் புலம்பத் தொடங்கியுள்ளதாக விஜய் திமுகவை நேரடியாக தாக்கியுள்ளார். இதை ஒப்புக்கொள்வது போல, தங்களது கதறலை முப்பெரும் விழா (திமுக) கடிதம் ஒன்றின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர். வெளியே கொள்கை என்று பேசுவதும் உள்ளுக்குள்ளே பாஜகவுடன் உறவாடுவதும் யார் என்று மக்களுக்கு புரிகிறது என்றும் அட்டாக் செய்துள்ளார்.
Similar News
News September 14, 2025
ASIA CUP TOSS: இந்தியா பவுலிங்

ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. கடந்த போட்டியில் UAE-ஐ இந்தியாவும், ஓமனை பாகிஸ்தானும் வீழ்த்தி இருந்தன. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பேட்டிங்கிற்கும், பாகிஸ்தானின் பவுலிங்கிற்கும் கடும் சவால் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 14, 2025
விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தலாம்: பிரேமலதா

நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு கூட்டங்களில் விஜய்யும் – விஜயகாந்தும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை அதிகமாக காணமுடிந்தது. இந்நிலையில், விஜயகாந்த் தமிழக மக்களின் சொத்து, அவரது புகைப்படத்தை திரைத்துறையினரோ, அரசியல் கட்சியினரோ பயன்படுத்துவதை நாங்கள் நிச்சயமாக தடுக்க மாட்டோம் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
News September 14, 2025
விலை கிடுகிடுவென உயர்ந்தது

தீபாவளிக்கு 37 நாள்களே இருக்கும் நிலையில், பட்டாசு விற்பனை இப்போதே களைகட்ட தொடங்கியுள்ளதாக பட்டாசு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு தீபாவளிக்கு புகிடார், தர்பூசணி வெடி, குங் பூ பாண்டா, பீட்சா உள்ளிட்ட புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், உற்பத்தி குறைந்துள்ளதால் பட்டாசு பற்றாக்குறை ஏற்படும் என்றும், பட்டாசு விலை 10% வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.