News March 17, 2024
விஜய் கட்சியால் பாதிப்பு திமுகவுக்கு தான்!

விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாதிப்பு திமுகவுக்கு தான் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ விஜய் கட்சியினர் சிறு பிள்ளைகள், 2026 தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து பார்க்கலாம். ஏனெனில், விஜய் ரசிகர்கள் பெரும்பகுதி திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். அதனால் விஜய் கட்சி ஆரம்பித்ததில் திமுகவுக்கு கோபம். அதிமுகவுக்கு இப்போது ரூட் கிளியர்’ என்றார்.
Similar News
News December 13, 2025
அரியலூர்: குடும்ப தகராறு – கணவனுக்கு சிறை

அரியலூர் மாவட்டம் கீழப்பளூர் காவல் சரகம் மேலகருப்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் அவரது மனைவி சரிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும், சரிதாவை அடித்து காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கீழப்பழுர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து, அரியலூர் கூடுதல் மகிழா நீதிமன்றம் ராமச்சந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
News December 13, 2025
பட்டாவில் வருகிறது மாற்றம்.. கூடுதல் விவரங்கள் சேர்ப்பு

தற்போது வழங்கப்படும் பட்டாவில் தாலுகா, கிராமம், உரிமையாளர் பெயர், சர்வே எண் உள்ளிட்ட பிரிட்டிஷ் கால விவரங்கள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன. தற்போதைய நடைமுறைகள் இல்லாததால் குழப்பங்கள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதை களையும் நோக்கில் விற்பனை பத்திர எண், சொத்தின் எல்லைகள், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பட்டாவில் சேர்ப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 13, 2025
BREAKING: தங்கம் விலை சவரன் ₹1 லட்சம்

தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், ஒரு சவரன் ₹1 லட்சத்தை கடந்துவிட்டது. அதாவது, 22 கேரட் தங்கம் சவரன் ₹98,960, Hallmarking Charges ₹1,904, GST 3% ₹2,968 சேர்த்து ₹1,03,832-க்கு விற்பனையாகிறது. சில கடைகளில் சேதாரம் எனக் கூடுதலாகவும் பணம் வசூலிக்கப்படுகின்றது. சர்வதேச சந்தையில்(1 அவுன்ஸ் $4,300) ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.


