News April 6, 2024

திமுக உண்மையை மறைத்து நாடகமாடுகிறது

image

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக உண்மையை மறைத்து நாடகமாடுவதாக நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். வேலூர் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், கச்சத்தீவை காங்கிரஸ், திமுகவினர் சேர்ந்துதான் இலங்கைக்கு கொடுத்துள்ளனர் என்றும், தற்போது தேர்தலுக்காக உண்மையை மறைத்து, நாடகமாடுவதாகவும் சாடினார். மேலும், நாட்டில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதே காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில்தான் என்றும் அவர் கூறினார்.

Similar News

News February 19, 2026

விலை ₹45,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஜாக்பாட் தள்ளுபடியை Maruti Suzuki நிறுவனம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹25,000 முதல் அதிகபட்சமாக ₹45,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன மாடல் கார்கள், அதன் விலை என்ன, எவ்வளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை மேலே உள்ள போட்டோஸை இடப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்கள். புக்கிங் செய்ய இப்போதே திட்டமிடுங்கள். SHARE IT.

News February 19, 2026

திங்கள்கிழமை.. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்

image

மாநிலம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் வரும் பிப்.23 – 28-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இத்தேர்வு காலை 9-11 மணி வரை; பிற்பகல் 2-4 மணி வரையிலும் இருவேளைகளாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆசிரியர்களையே Scribes-ஆக நியமனம் செய்தும் உத்தரவிட்டுள்ளது.

News February 19, 2026

விஜய் நிகழ்ச்சி.. ரூல்ஸ் போட்ட தவெக

image

வேலூர் அகரம்சேரியில் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள விஜய் நிகழ்ச்சியில 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியானது மக்கள் சந்திப்பு அல்ல; நிர்வாகிகள் சந்திப்பு என்றும், QR கோடு பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!