News October 19, 2025
திமுகவுக்கு வயிற்று எரிச்சல்: சி.வி.சண்முகம்

அதிமுகவின் மாபெரும் கூட்டணியை பார்த்து திமுகவுக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார். முரசொலி மாறனை இலாகா இல்லாத அமைச்சராக ஒரு வருடம் வைத்திருந்தபோது, திமுகவிற்கு பாஜக நல்ல கட்சியாக தெரிந்ததா என்று கேள்வி எழுப்பினார். மேலும், கச்சத்தீவை காங்., விட்டுக்கொடுத்தபோது எதிர்ப்பு தெரிவிக்காத திமுக, இப்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் நாடகம் ஆடுவதாகவும் சாடினார்.
Similar News
News October 19, 2025
BREAKING: 11 பேர் அதிரடி நீக்கம்

அண்ணா பல்கலை.,யில் போலி பேராசிரியர்கள் நியமன விவகாரத்தில் பதிவாளர் பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். நேற்று அண்ணா பல்கலை.,யில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், இவர்கள் 11 பேரும் பேராசிரியர்களாக தொடர்வார்கள் எனவும் கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்காக உயர் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
News October 19, 2025
கார் விபத்தில் சிக்கினார் Ex CM

உத்தர பிரதேசத்தின் மீரட்டில் உத்தராகண்ட் Ex CM ஹரிஷ் ராவத்தின் கார் விபத்தில் சிக்கியது. நேற்று (அக்.18) இரவு 7.30 மணிக்கு ஹரிஷின் கார் கரோலி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது காரின் குறுக்கே அடையாளம் தெரியாத நபர் ஒரு வந்துள்ளார். இதனால் Sudden Brake அடிக்க, கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியது. இவ்விபத்தில் இருந்து ஹரிஷ் ராவத் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்
News October 19, 2025
திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறினால்.. திருமா

திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறினால் இதை தீபாவளியாக கொண்டாடுவார்கள் என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவுக்கு நேர் எதிராக இருக்கும் ஒரே கட்சி என்றால், அது விசிகதான் எனக் கூறினார். மேலும் திமுக கூட்டணி வலுவாக இருப்பதற்கு விசிக முக்கிய காரணம். இதை உடைக்க வேண்டும் என திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக விசிக செயல்படுவதுபோல் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துவதாக சாடினார்.