News July 5, 2024
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுகவுக்கு மனம் இல்லை

விக்கிரவாண்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது. பீகார், கர்நாடக அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தடை இல்லாத போது, தமிழ்நாட்டிற்கு மட்டும் எவ்வாறு தடை விதிக்கப்படும் என கேள்வி எழுப்பினார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மனம் இல்லாமல் திமுக மத்திய அரசின் மேல் பழி போடுகிறது என குற்றம்சாட்டினார்.
Similar News
News September 22, 2025
போராட்டங்களை சந்திக்கும் நாடுகள் PHOTOS

சமீப காலமாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. அவற்றில், சமூக ஊடக செயலி தடைகள், ஊழல், சில பிரிவினரின் கோரிக்கைகள், குடியேற்ற எதிர்ப்பு உள்ளிட்டவை அடங்கும். மேலே, எந்தெந்த நாடுகளில் போராட்டம் என்று போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. ஏதேனும் விடுபட்டிருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 22, 2025
₹5,000 விலை குறைந்தது… HAPPY NEWS!

ஏசி மீதான GST 28%ல் இருந்து 18% குறைக்கப்பட்டுள்ளதால் முக்கியமான ஏசி பிராண்டுகளின் விலை குறைந்துள்ளது. அதன்படி, வோல்டாஸ் 1.5 டன் ஸ்பிளிட் பழைய விலை = ₹43,000 புது விலை = ₹39,600, எல்ஜி இன்வெர்ட்டர் 1.5 டன் = ₹52,000 புது விலை = ₹47,900, சாம்சங் ஸ்பிளிட் 1 டன் பழைய விலை = ₹35,000 புது விலை = ₹32,300, ப்ளூ ஸ்டார் இன்வெர்ட்டர் 1.5 டன் = ₹55,000 புது விலை = ₹50,700. வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க.
News September 22, 2025
38 ஆண்டுகள் கழித்து ரீரிலீஸாகும் மனிதன் படம்

தமிழ் சினிமாவில் நிலவும் ரீரிலீஸ் கலாசாரத்தில் தற்போது ரஜினியின் ‘மனிதன்’ படமும் இணைந்துள்ளது. 1987-ல் இப்படம் வெளியானபோது 25 வாரங்களை தாண்டி தியேட்டரில் ஓடி பெரும் வெற்றி பெற்றது. S.P.முத்துராமன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ரூபினி, ரகுவரன், ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் நடித்திருப்பர். ரஜினியின் 50 ஆண்டுகால சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் அக்.10-ல் ரீரிலீஸாகிறது.