News October 11, 2025

சமூகநீதியை திமுக புதைத்துவிட்டது: அன்புமணி

image

கடந்த 37 ஆண்டுகளில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கிடைத்த 3 வாய்ப்புகளையும் சிதைத்து சமூகநீதியை திமுக குழி தோண்டி புதைத்துவிட்டதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டத்தை போட்டு சாதியை ஒழிக்க முடியாது என்ற அவர், அரசாணைகளை வெளியிடுவதன் மூலம் அவற்றை சாதிக்க முடியாது என சாடியுள்ளார். தெரு, ஊர்களில் உள்ள சாதிப் பெயரை மாற்ற தமிழக அரசு அரசாணை பிறப்பித்த நிலையில், அன்புமணி இவ்வாறு கூறியுள்ளார்.

Similar News

News October 11, 2025

BREAKING: நடிகர் ரஜினி வீட்டில் இரவில் பரபரப்பு

image

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, தேனாம்பேட்டை போலீஸார் அவரது வீட்டிற்கு விரைந்தனர். மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் வீடு முழுவதும் சோதனையிட்டனர். இதனையடுத்து, அது வெறும் புரளி என தெரியவந்தது. விஜய், கமல் வீடுகளுக்கும் அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

News October 11, 2025

தூங்கும் உலகில் தூங்காத நகரங்கள் PHOTOS

image

உலகின் பல நாடுகளில் இரவில் ஜொலிக்கும் தூங்கா நகரங்கள் உள்ளன. உணவகம், போக்குவரத்து, வர்த்தகம் என அனைத்தும் இரவில் இயங்கும். வேலைவாய்ப்பு, சுற்றுலா, நவீன வாழ்க்கைமுறை ஆகியவையே தூங்கா நகரங்களின் முக்கிய காரணிகளாக இருந்து வருகின்றன. மேலே, சில பிரபல நகரங்களின் பட்டியலை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த நகரம் எது?

News October 11, 2025

175 ரன்னில் அவுட்… ஜெய்ஸ்வால் சொன்னது என்ன?

image

வெ.இண்டீஸுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 175 ரன்னில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அதுபற்றி பேசிய அவர், இது ஆட்டத்தின் ஒரு பகுதியே. நான் எப்போதுமே நீண்ட இன்னிங்ஸ் ஆடி ஆட்டத்தை நீட்டிக்கவே விரும்புகிறேன் என்றார். பந்து நன்றாக வரும்போது நீண்ட நேரம் கிரீஸில் நின்று ரன்களை குவிக்க முடியும் என்ற அவர், இன்னும் பிட்ச் பேட்டிங்குக்கு தான் சாதகமாக உள்ளது. ஆனாலும், நம் பவுலர்கள் கலக்கலாக பந்துவீசுகின்றனர் என்றார்.

error: Content is protected !!