News July 13, 2024
திமுகவினர் ஏலம் எடுத்துள்ளனர் : அபிநயா சாடல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாதக டெபாசிட் இழந்ததாக திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதுகுறித்த கேள்விக்கு நாதக வேட்பாளர் அபிநயா, நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும். இந்த வெற்றி உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என திமுக வேட்பாளரை கேளுங்கள் என பதிலடி கொடுத்தார். மேலும், கடந்த தேர்தலைவிட கூடுதலாக 2000 வாக்குகள் பெற்றுள்ளோம். இது தேர்தலே இல்லை, திமுகவினர் ஏலம் எடுத்துள்ளனர் என சாடினார்.
Similar News
News November 22, 2025
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: EPS

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்றும், அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள CM ஸ்டாலின், ராகுல், சோனியா காந்தியிடம் பேசி சுமுகமான முடிவை எடுக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
News November 22, 2025
வணிகம் 360°: US நிறுவனத்துடன் கைகோர்க்கும் TCS

*பிரபல உணவுப்பொருள் நிறுவனமான வில்மருடனான பங்குகளை அதானி குழுமம் முழுமையாக விற்றது. *நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான TCS, இந்தியா முழுவதும் AI தரவு சேமிப்பகங்களை அமைக்கும் திட்டத்தை அமெரிக்காவின், டிபிஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
*நாட்டில் போதிய அளவில் அன்னிய செலாவணி கையிருப்பில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
News November 22, 2025
காசி தமிழ் சங்கத்துக்கு செல்ல 7 சிறப்பு ரயில்கள்

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியை ஒட்டி தமிழகத்தில் இருந்து, உ.பி., பனாரஸுக்கு 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் கன்னியாகுமரி (நவ.29,7 ;11.45 AM), சென்னை (டிச., 2, 6,12; 4.15 AM), கோவையில் (டிச., 3,9; 11.15 AM) இருந்து பனாரஸுக்கு செல்கின்றன. இந்த சிறப்பு ரயில்களின் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கும்.


