News August 17, 2025
திமுகவுக்கு புதிய தலைவலி.. எப்படி சமாளிக்க போகிறது?

NDA-வின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக களமிறக்கியுள்ளது திமுகவுக்கு புதிய தலைவலியை கொடுத்துள்ளது. ‘INDIA’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, அந்த கூட்டணி வேட்பாளரை ஆதரிக்குமா?, தமிழர் என்ற அடிப்படையில் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை ‘INDIA’ கூட்டணி வேட்பாளரை திமுக ஆதரித்தால் அதை கூறியே பாஜக அரசியல் செய்ய வாய்ப்புள்ளது. உங்க கருத்து என்ன?
Similar News
News March 17, 2026
தேர்தல் அறிக்கை: கருத்து கேட்கும் காங்கிரஸ்

2026 தேர்தலுக்கான காங்., தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆலோசனை கூட்டம் மார்ச் 19-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களின் கருத்துகளும் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, pro@karti.in என்ற இ-மெயில் முகவரி மூலமாகவோ (அ) 9500191333 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. நீங்க என்ன சொல்றீங்க?
News March 17, 2026
தமிழக தேர்தல்.. ECI புதிய அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், மறைந்த தலைவர்களின் உருவச் சிலைகளை மறைக்கத் தேவையில்லை என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் ECI அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, வாக்குப்பதிவின்போதும் மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை.
News March 17, 2026
விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை: EPS அடுத்த அறிவிப்பு

குலவிளக்கு திட்டத்தின் கீழ் மகளிருக்கு ₹2,000, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 சிறப்புத் தொகை, பொங்கல் பரிசு ₹1,000 உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை 3 கட்டங்களாக EPS அறிவித்திருந்தார். இந்நிலையில், முழுமையான தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


