News October 24, 2024
திமுக அரசின் அலட்சியப் போக்கு: பிரேமலதா சாடல்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை அரசு தடுக்கத் தவறிவிட்டதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றஞ்சாட்டியுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்கப்படுவதாக சாடிய அவர், இதனை தடுக்கத் தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது என்றார். இவ்விவகாரத்தில் தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News January 12, 2026
இந்திய அணியில் ஆயுஷ் பதோனி

நியூசிலாந்து ODI தொடருக்கான இந்திய அணியில் ஆயுஷ் பதோனி சேர்க்கப்பட்டுள்ளார். நேற்றைய போட்டியில் <<18832341>>வாஷிங்டன் சுந்தர்<<>> பீல்டிங் செய்தபோது அவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதால் 2-வது, 3-வது போட்டிக்கான IND அணியில் ஆயுஷ் பதோனி சேர்க்கப்படுவதாக BCCI அறிவித்துள்ளது. பண்ட்-ஐ தொடர்ந்து சுந்தரும் தொடரில் இருந்து விலகியது, அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
News January 12, 2026
சென்சாரில் சிக்கி சின்னா பின்னமான தமிழ் படங்கள்

கடந்த காலத்தில் தணிக்கை குழுவிடம் ஏராளமான திரைப்படங்கள் சிக்கி தவித்துள்ளன. உச்ச நட்சத்திரங்களின் படம் சென்சாரில் சிரமப்படும்போது தான் அது பேசுபொருளாகிறது. தற்போது ‘ஜன நாயகன்’ சிக்கி தவிப்பதுபோல் இதற்குமுன் என்னென்ன படங்கள் சிக்கின என்று தெரியுமா? சென்சாரில் சிக்கி சின்னா பின்னமான தமிழ் படங்கள் லிஸ்டை, மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News January 12, 2026
விஜய்க்கு நெருக்கடி கொடுக்கவில்லை: நயினார்

ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் சிக்கல், சிபிஐ விசாரணைக்கு அழைப்பு என விஜய்க்கு மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதை மறுத்துள்ள நயினார் நாகேந்திரன், விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் நேரத்தில் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


