News July 4, 2024
திமுக அரசு தூக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும்: இபிஎஸ்

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி ஒருவர் உயிரிழந்ததற்கு, இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி சுவடு மறைவதற்குள் மீண்டும் உயிரிழப்பு நடந்துள்ளதாக சாடிய அவர், திமுக அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது? என்றும் வினவியுள்ளார். கள்ளச்சாராயம் அருந்தியதாக இன்று காலை மூவர் விழுப்பும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Similar News
News September 22, 2025
கருணாநிதி சிலையை நிறுவ அனுமதி மறுப்பு

நெல்லையில் வள்ளியூர் சந்தை அருகே Ex CM கருணாநிதியின் சிலையை நிறுவ அனுமதி கோரிய TN அரசின் மனுவை SC தள்ளுபடி செய்தது. முன்னதாக, மக்களுக்கு இடையூறு ஏற்படும் என கூறி சிலை வைப்பதற்கு சென்னை HC மறுப்பு தெரிவித்திருந்தது. இதனையடுத்து, தமிழக அரசு SC-ல் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், மக்களுக்கு இடையூறு ஏற்படும் என கருதி சென்னை HC அளித்த உத்தரவில், தலையிட விரும்பவில்லை என SC தெரிவித்துள்ளது.
News September 22, 2025
GST, IMD அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சிலை சாலையிலுள்ள GST அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் இந்த மிரட்டல் புரளி என்று தெரியவந்துள்ளது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
News September 22, 2025
வந்தாச்சு ‘சென்னை ஒன்’.. இனிமே டிக்கெட் எடுப்பது ஈசி!

ஒரே டிக்கெட்டில் அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் பயன்படுத்தும் <<17789688>>’சென்னை ஒன்’<<>> செல்போன் APP-ஐ CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் APP உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பயணத் திட்டமிடலுக்கு ஏற்ப QR CODE டிக்கெட்டை பெற்று அனைத்து பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்தலாம்.