News August 29, 2025
விளம்பரத்திற்காக செயல்படும் திமுக அரசு: அன்புமணி

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்ட சம்பவத்தை அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். நம்பிக்கையுடன் மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களுக்கு திமுக அரசு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்கிறது என்பதற்கு இதுவே சான்று என அவர் X-ல் பதிவிட்டுள்ளார். இது ஊரை ஏமாற்றும் திட்டம் எனவும், விளம்பரத்திற்காக செயல்படும் அரசிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News August 30, 2025
தோனி என்னை அசிங்கமாக திட்டினார் : மோகித்

கேப்டன் கூல் எனப்படும் தோனி பொறுமையை இழந்தால் கடுமையாக திட்டுபவர் என்று மோகித் சர்மா தெரிவித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக தோனி ஈஷ்வர் பாண்டேவை பந்து வீச அழைத்த நிலையில், நான் சென்றேன். நான் ரன் அப் எடுத்ததால், தோனி தடுத்தும் நடுவர் என்னை பந்துவீச சொல்ல அவர் அசிங்கமாக திட்டினார். முதல் பந்திலேயே யூசப் பதானின் விக்கெட் எடுத்தேன். அப்போதும் தோனி தன்னை திட்டியதாக மோகித் சர்மா கூறினார்.
News August 30, 2025
இந்தியா – சீனா நட்புறவு உலகத்திற்கு அவசியம்: PM

உலகத்தின் பொருளாதார நிலைத்தன்மைக்காக இந்தியாவும், சீனாவும் இணைந்து வேலை செய்ய வேண்டியது அவசியம் என PM மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள PM அங்குள்ள மீடியாவிற்கு அளித்த நேர்காணலில், சீனா உடனான உறவை முன்னோக்கி கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும், இருநாடுகளின் நட்புறவு உலக நன்மைக்கு அவசியம் என்றும் கூறியுள்ளார். ஜப்பானில் இருந்து PM மோடி, நாளை சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
News August 30, 2025
கூகுளுடன் ஒப்பந்தம் செய்த ICC

உலகளவில் மகளிர் கிரிக்கெட்டை பிரபலபடுத்த கூகுளுடன் ICC ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் மகளிர் கிரிக்கெட் அதிகமான மக்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 மகளிர் உலகக்கோப்பை, 2026 மகளிர் T20 உலகக்கோப்பையை விளம்பரப்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிக்கும். ஆண்ட்ராய்டு, கூகுள் ஜெமினி, கூகுள் பிக்சல், கூகுள் பே உள்ளிட்ட பல தளங்களில் மகளிர் கிரிக்கெட் விளம்பரப்படுத்தப்படும்.