News March 1, 2025
திமுக ஆட்சி மீண்டும் வேண்டும்: திருமாவளவன்

இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆற்றல் வாய்ந்த தலைவராக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக திருமாவளவன் பாராட்டியுள்ளார். முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்த மண்ணையும், மக்களையும் பாதுகாக்க மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்றார். பெரியாரின் கருத்தியலையும், அம்பேத்கரின் சிந்தனைகளையும் பாதுகாக்க தமிழகத்தில் பாஜக காலூன்ற விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2025
இம்மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை

பொது விடுமுறை, பிராந்திய நிகழ்வுகளுக்கான விடுமுறை, 2, 4வது சனிக்கிழமை, வழக்கமான ஞாயிறு விடுமுறை என வங்கிகளுக்கு இம்மாதம் மொத்தம் 14 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இதனால், வங்கிகளுக்கு நேரடியாக சென்று அத்தியாவசிய வங்கி சேவைகள் மற்றும் பரிவர்த்தனை மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்த லீவு நாட்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். முழு விவரங்களை அறிய <
News March 1, 2025
பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடர்: பிரக்ஞானந்தா வெற்றி

பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 3வது சுற்றில் பிரக்ஞானந்தா வென்றார். இப்போட்டியில் பிரக்ஞானந்தா, செக் குடியரசு வீரர் டாய் வென்னைச் சந்தித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். முதல் இரு ஆட்டங்களில் அவர் டிரா செய்திருந்தார். 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
News March 1, 2025
இவர்கள் ஆட்சிக்கு வருவது பேராபத்து: ஜவாஹிருல்லா

அரசியலையும் சிலர் சினிமாவை போல் நினைப்பதாக நடிகர் விஜயை மறைமுகமாக ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். பாசிசமா, பாயாசமா என்று சிலர் சிறுபிள்ளைத்தனமாக பேசுவதாகவும், அவர்கள் ஆட்சிக்கு வருவது தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்றும் சாடியுள்ளார். சினிமாவை போல் அரசியல் இருக்காது என்றும், பேச்சை கேட்பவர்கள் எல்லாம் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.