News September 3, 2025
திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான்

ஐயா வைகுண்டரை அரசுத்தேர்வு வினாத்தாளில் திமுக அரசு திட்டமிட்டு இழிவுபடுத்திவிட்டதாக சீமான் சாடியுள்ளார். திமுக அரசு தொடர்ச்சியாக தமிழின முன்னோர்கள், தலைவர்களை உண்மைக்குப் புறம்பான அவதூறு பொய்ப்பரப்புரைகள் மூலம் அவமதித்து வருவதாக X தள பதிவில் சீமான் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் திமுக அரசு மன்னிப்பு கேட்பதோடு, கேள்வியை உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 7, 2026
தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்!

தஞ்சாவூர் கொடிமரத்து மூலை பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெற உள்ளதால், வரும் மார்ச் 9-ம் தேதி முதல், கும்பகோணம் – திருவையாறில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கீழவாசல் வழியாக செல்ல வேண்டும். இதேபோல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் மேலவீதி, பழைய திருவையாறு சாலை வழியாக செல்ல வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News March 7, 2026
கருவறை வாயிலில் இருப்பவர்கள் யார் தெரியுமா?

கோயில் கருவறைக்கு வெளியே இருபுறமும் துவாரபாலகர்கள் இருப்பார்கள். ஆகம விதிப்படி, கருவறையின் வாயில் காப்பவர்கள் இவர்கள். பக்தர்கள் முதலில் துவாரபாலகர்களை வணங்கிவிட்டு பின்னர், தெய்வத்தை வழிபட வேண்டும் என்பது முன்னோர்கள் கடைபிடித்த விதி. விஷ்ணு ஆலயங்களில் ஜயனும், விஜயனும், சிவாலயங்களில் சண்டனும், பிரசண்டனும் துவாரபாலகர்களாக உள்ளனர். அம்மன் கோயிலில் துவாரபாலகிகளாக ஹரபத்ரா, சுபத்ரா உள்ளனர்.
News March 7, 2026
தவெக தான் எதிர்க்கட்சி: ஜோதிமணி

2026 தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்படும் என ஜோதிமணி கூறியுள்ளார். விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது என குறிப்பிட்ட அவர், தேர்தலில் எதிர்க்கட்சியாக தவெக வருவதற்கு நிச்சயமாக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், TN-ல் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்றும், அதிமுக சந்திக்கப்போகும் கடைசி தேர்தல் இதுதான் எனவும் பேசியுள்ளார்.


