News April 25, 2025
படித்த இளைஞர்களுக்கு திமுக அரசு துரோகம்: இபிஎஸ்

அரசில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 3935 பணியிடங்களுக்கான (Group 4 ) அறிவிப்பை மட்டும் திமுக அரசு வெளியிட்டுள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது TNPSC தேர்வை நம்பி வருடக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் என சாடிய அவர், கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படாமல், உடனே Group4 பணியிடங்களை 10,000-ஆக உயர்த்த வேண்டும் என்றார்.
Similar News
News April 26, 2025
எல்லையில் துப்பாக்கி சூடு… அதிகரித்த பதற்றம்

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு எல்லை கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூட்டை தொடங்கியுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News April 26, 2025
அதிமுக கூட்டணியில் மேலும் சில புதிய கட்சிகள்: இபிஎஸ்

அதிமுக கூட்டணியில் மேலும் சில புதிய கட்சிகள் இணையக்கூடும் என்று இபிஎஸ் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பேசிய இபிஎஸ், பாஜகவுடன் தற்போது அதிமுக கூட்டணி அமைத்து இருப்பதாகவும், இக்கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணி அமையும் என்றும் கூறினார். ஆனால் அக்கட்சிகள் பெயரை அவர் கூறவில்லை. எந்த கட்சிகள் சேரும்? உங்கள் கருத்து என்ன?
News April 26, 2025
உல்லாசத்துக்கு இடையூறு: பெண் குழந்தை கொலை

நெல்லையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய், 3 காதலர்களை போலீஸ் கைது செய்தது. மகாதேவன்குளத்தை சேர்ந்த பிருந்தாவுக்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை இருந்தது. பிருந்தாவுடன், லிங்கசெல்வன், முத்துசுடர், பெஞ்சமின் உல்லாசமாக இருந்தபோது குழந்தை தண்ணீர் கேட்கவே, அடித்து கொலை செய்து, கீழே விழுந்து இறந்ததாக பிருந்தா, காதலர்கள் நாடகமாடியது தெரிந்ததால் கைது செய்யப்பட்டனர்.