News August 31, 2025
திமுக அரசு அதிகார துஷ்பிரயோகம் : அண்ணாமலை

டிஜிபி நியமனத்தில் திமுக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தனது X தள பதிவில் அவர், <<17573069>>டிஜிபி நியமனத்தில் <<>>உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். பொறுப்பு ஜிடிபி நியமனம் மூலம் அப்பதவிக்கு தகுதியான 6 பேரின் பதவி உயர்வை திமுக தட்டிப்பறித்திருப்பதாக சாடியிருக்கிறார். திமுகவின் ஆட்டம் விரைவில் முடிவடையும் என்றும் எச்சரித்துள்ளார்.
Similar News
News September 3, 2025
RECIPE: உடல் கொழுப்பை குறைக்கும் தினை தோசை

◆ நார்ச்சத்து, புரோட்டீன், இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்திருப்பதால், செரிமான ஆரோக்கியம் மேம்பட்டு, உடலின் கொழுப்பு குறையவும் உதவுகிறது.
➥தினை அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி சுமார் 3 மணிநேரம் ஊற வைக்கவும்.
➥அதனை தோசை மாவு பதத்திற்கு அரைத்து, உப்பு சேர்த்து மீண்டும் 12 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின் தோசையாக வார்த்தெடுத்தால், சுவையான தினை தோசை தயார். SHARE IT.
News September 3, 2025
மதுரை யாருக்கு? மூர்த்தி Vs பிடிஆர் இடையே பனிப்போர்

மதுரையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர துடிக்கும் அமைச்சர் மூர்த்திக்கு PTR முட்டுக்கட்டை போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே பனிப்போர் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேயர் இந்திராணியை மாற்றாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், திமுக தலைமை மதுரையிலுள்ள 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற அசைன்மென்ட்டை மூர்த்தியிடம் கொடுத்திருக்கிறது.
News September 3, 2025
BREAKING: தங்கம் விலை Record படைத்தது

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்து ₹78,440-க்கும், கிராமுக்கு ₹80 உயர்ந்து ₹9,805-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒருகிராம் வெள்ளி விலை ₹137-க்கும், கிலோ வெள்ளி ₹1,37,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.