News August 8, 2025
திமுகவுக்கு ஊழலுக்கான விருது: EPS காட்டம்

திமுகவின் 50 மாத ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும் அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதாகவும் EPS குற்றம்சாட்டியுள்ளார். சிவகாசியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், 4 ஆண்டுகளில் சுமார் 22,000 கோடி கொள்ளை அடித்துள்ளதாகவும், ஊழலுக்காக அவர்களுக்கு விருது கொடுக்க வேண்டும் என்றும் காட்டமாக விமர்சித்தார். மேலும், VCK, CPM, CPI, காங்கிரஸ் என கூட்டணி கட்சிகளை நம்பியே திமுக இருக்கிறது என்றார்.
Similar News
News August 8, 2025
பாலியல் உறவுக்கான வயது 18 ஆக இருப்பதே நல்லது: அரசு

பரஸ்பர பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18 ஆகவே தொடர வேண்டும் என SC-ல் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இளம் பருவ காதல் என்ற போர்வையில் விதிவிலக்குகளை அறிமுகப்படுத்துவது ஆபத்தானது எனவும் குறிப்பிட்டுள்ளது. பரஸ்பர பாலியல் உறவுக்கான சம்மத வயதை 16 ஆக குறைக்க வேண்டும் என வழக்குகளின் உதவிக்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் பரிந்துரைத்திருந்தார். உங்கள் கருத்து என்ன?
News August 8, 2025
‘The Paradise’ அடுத்த ஆக்ஷன் அவதாரம் எடுத்த நானி!

தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்த தெலுங்கு ஹீரோஸ் லிஸ்ட்டில் டாப்பில் இருக்கிறார் நானி. இவரின் நடிப்பில் தற்போது ‘The Paradise’ என்ற படம் உருவாகி வருகிறது. ‘தசரா’ படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடெல்லா இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், நீண்ட முடியுடன் வித்தியாசமாக உள்ளார் நானி. படம் அடுத்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி வெளியாகவுள்ளது. போஸ்டர் எப்படி இருக்கு?
News August 8, 2025
Central, Junction, Terminal: இவற்றின் அர்த்தம் தெரியுமா?

ரயில் நிலையங்களில் சென்ட்ரல், ஜங்ஷன், டெர்மினல் போன்றவை அந்த நிலையத்தின் வகையை குறிக்கிறது.
Central: ஒரு நகரத்தின் முக்கிய ரயில் நிலையம்(Eg- சென்னை சென்ட்ரல்)
Junction: ஒன்றுக்கு மேற்பட்ட ரயில் பாதைகள் சந்திக்கும் நிலையம். இங்கே ரயில்கள் வெவ்வேறு திசைகளில் இருந்து வந்து செல்கின்றன. (Eg- மதுரை ஜங்ஷன்)
Terminal: ஒரு ரயில் பாதை முடிவடையும் நிலையமாகும். (Eg- கன்னியாகுமரி டெர்மினல்)