News December 14, 2024
திமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

திமுக செயற்குழுக் கூட்டம் வரும் 18ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், இந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கனமழை எச்சரிக்கை காரணமாகவும், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறுவதாலும், திமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 15, 2025
இனி இ-சேவை மையங்களுக்கு செல்ல வேண்டாம்

டிசம்பரில் இருந்து புதிய ஆதார் செயலி பயன்பாட்டுக்கு வரவிருப்பதாக UIDAI தலைமைச் செயல் அதிகாரி புவனேஷ்குமார் அறிவித்துள்ளார். இதனால், பொதுமக்கள் இனி இ-சேவை மையங்களுக்கே செல்லத் தேவையில்லை. தற்போது முகவரி மாற்றுவதை போலவே, செல்போன் எண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை இந்த செயலி (face authentication) மூலம் மாற்ற முடியும். இதனால், பயனர்களின் விவரம் தவறாக பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும் என்றார்.
News September 15, 2025
நாய் கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

நாய் கடித்தவுடன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ➤நாய் கடித்த இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு கழுவுங்கள் ➤ஆல்கஹால் (அ) கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்யணும் ➤கடிபட்ட இடத்தில் மிளகாய் பொடி, எண்ணெய் என எதையும் தடவ வேண்டாம் ➤எந்த ஒரு கிரீமையும் அப்ளை செய்யக்கூடாது ➤ரேபீஸ் ஊசியின் அனைத்து தவணைகளையும் செலுத்த வேண்டியது அவசியம். SHARE IT.
News September 15, 2025
கத்தாருக்காக இஸ்ரேலை எச்சரித்த டிரம்ப்

கத்தாரில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் USA-க்கு பங்கு இல்லை என டிரம்ப் விளக்கமளித்துள்ளார். கத்தாரும் அமெரிக்காவும் நல்ல நட்புறவை கொண்டிருப்பதாக கூறிய அவர், இஸ்ரேல் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்தார். அதோடு, கத்தாரும் ஹமாஸ் அமைப்பை கட்டுப்படுத்துவதற்கான வழியை கண்டறிய வேண்டும் எனவும் அவர் கூறினார்.