News March 20, 2024
திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு!

மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் தேவைகளை கேட்டறிந்தனர். இதையடுத்து, முழுமையாக தயாரான தேர்தல் அறிக்கை கனிமொழி தலைமையில் இன்று வெளியிடப்படுகிறது.
Similar News
News March 13, 2026
இந்த வயதில் முதலீடு ரொம்ப முக்கியம்!

பொதுவாக 40-50 வயதுக்குள் எடுக்கப்படும் நிதி முடிவுகள் ஒருவரின் ஓய்வு வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால்தான் அந்த வயதில் வேலை மாறும்போது PF-ஐ திரும்பப் பெற வேண்டாம் என்றும், அவசரமாக ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்களை வாங்க வேண்டாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பணவீக்கத்தால் பாதிக்கப்படாத சொத்துக்களில் முதலீடு செய்யும்படியும் அறிவுறுத்துகின்றனர்.
News March 13, 2026
திமுகவின் ஸ்லீப்பர் செல் ஆதவ்: சார்லஸ் மார்டின்

தவெகவுடன் எந்தக் கட்சியும் கூட்டணி சேராததற்கு ஆதவ் அர்ஜுனா தான் காரணம் என LJK தலைவர் சார்லஸ் மார்டின் குற்றஞ்சாட்டியுள்ளார். தவெகவை வேரோடு அழிப்பதற்காக திமுகவால் அனுப்பப்பட்ட ஸ்லீப்பர் செல் தான் ஆதவ் என்றும், தவெகவுக்கு கிடைக்க வேண்டிய மக்கள் ஆதரவை அவர் கச்சிதமாக எதிரணிக்கு மாற்றுகிறார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கரூர் துயரத்திற்கு ஆதவே காரணம் என்றும் சார்சல் மார்டின் கூறியுள்ளார்.
News March 13, 2026
பெட்ரோல், டீசல்.. இரவில் புதிய அறிவிப்பு வெளியானது

பல இடங்களில் கேன்களில் பெட்ரோல் வாங்கும் நிலை அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இந்திய ஆயில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான அளவில் பெட்ரோல், டீசல் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அச்சத்தில் அதிகமாக வாங்குவது, தவறான முறையில் எரிபொருளை சேமித்து வைப்பதை பொதுமக்கள் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


