News October 5, 2025

பெரியார் உலகத்துக்கு திமுக ₹1.5 கோடி நிதி

image

திருச்சியில் அமையவுள்ள பெரியார் உலகத்துக்கு தனது ஒரு மாத சம்பளத்தை அளிப்பதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய அவர், திமுக MP, MLA-க்களின் ஒரு மாத சம்பளம் சேர்த்து மொத்தம் ₹1.5 கோடியை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதை நன்றியுணர்வோடு அளிப்பதில் திமுகவினர் பெருமை அடைவதாகவும், பெரியார் இருந்தபோதே அவருடைய சிந்தனைகளை செயல்படுத்தியது திமுக என்றும் கூறினார்.

Similar News

News March 18, 2026

6 தொகுதிகளால் காங்., – திமுக இடையே பஞ்சாயத்து

image

புதுச்சேரியில் திமுக – காங்., இடையே உடன்பாடு ஏற்படாததற்கு 6 தொகுதிகளில் சிக்கல் நிலவுவதுதான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்பவன், நெல்லித்தோப்பு, மண்ணாடிப்பட்டு, திருபுவனை, மங்கலம், கதிர்காமத்தில் போட்டியிட 2 கட்சிகளும் விரும்புவதால், தொகுதிப்பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக புதுச்சேரி காங்., தலைவர்கள் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.

News March 18, 2026

CPI-க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

image

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு(CPI) 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் முன்னிலையில் சற்றுமுன் தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை கையெழுத்தானது. கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு தளி மற்றும் பவானிசாகர் தொகுதிகளில் வெற்றி பெற்ற CPI-க்கு இத்தேர்தலில் ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளது.

News March 18, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது

image

தங்கம் விலை தொடர்ந்து 7-வது நாளாக சரிவைக் கண்டுள்ளது. சென்னையில், இன்று(18.03.2026) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹80 குறைந்து ₹14,570-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ₹640 குறைந்து ₹1,16,560-க்கு விற்பனையாகிறது. ஈரான் – இஸ்ரேல் இடையான போர் பதற்றத்திற்கு மத்தியிலும் கடந்த ஒரு வாரமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!