News February 8, 2025
பெரியார் மண்ணில் திமுக ஆதிக்கம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலையில் உள்ளார். முதல் சுற்று முடிவின்படி சந்திரகுமாா் 5,211 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 981 வாக்குகளும் பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடந்து வருகிறது.
Similar News
News September 9, 2025
VP Election: அடுத்தடுத்து புறக்கணிக்கும் கட்சிகள்

15-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தேர்தலை புறக்கணிப்பதாக பஞ்சாபின் ஷிரோமனி அகாலி தள் கட்சி அறிவித்துள்ளது. இக்கட்சிக்கு ஒரேயொரு MP உள்ளார். அதேபோல், சுயேட்சை MP-க்களான சரப்ஜீத் சிங் கல்சா, அம்ரித்பால் சிங் ஆகியோரும் புறக்கணித்துள்ளனர். ஏற்கெனவே BRS, பிஜு ஜனதா தள் ஆகிய கட்சிகளும் தேர்தலை புறக்கணித்துள்ளன.
News September 9, 2025
ஃபோன் தொலைந்தால் என்ன செய்யணும் தெரியுமா?

இந்தியாவில் <<17653918>>செல்போன் திருட்டு <<>>வாடிக்கையாகிவிட்டது. உங்கள் ஃபோன் திருடுபோனால் என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். ➤முதலில் ஃபோனின் IMEI நம்பரை நோட் செய்து, போலீசிடம் புகாரளிக்கவும் ➤அதன் பிறகு கூகுளில் https://www.ceir.gov.in/ போர்ட்டலுக்குள் சென்று ஃபோன் குறித்த தகவல்களை உள்ளிடுங்கள் ➤மொபைலில் உள்ள ஆக்டிவ் சிம்மை பிளாக் செய்யவேண்டும். SHARE.
News September 9, 2025
செங்கோட்டையன் புதிய முடிவு.. அதிமுகவில் மீண்டும் பரபரப்பு

டெல்லியில் FM நிர்மலா சீதாராமனை, கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ஒருங்கிணைந்த அதிமுகவாக 2026 தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என அவர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இன்று பிற்பகலில் தமிழகம் திரும்பும் செங்கோட்டையன், TTV தினகரனை நேரில் சந்தித்து பேச உள்ளார். முன்னதாக OPS-ம் செங்கோட்டையனை சந்திக்க உள்ளதாக கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.